ஆக்கப்படுவதும் ஆணாலே.
அழிக்கப்படுவது ஆணாலே
கனிவுடன்,,,
தோழி கலைவாணி
புதன், 18 மார்ச், 2009
புதிய பழமொழி
இடுகையிட்டது சுவரன் நேரம் 9:28 PM 0 கருத்துகள்
இரயிலில் ஒரு மயில்...

விரைவு இரயிலில் விரைவாக ஏறி அமர்ந்தேன்...
துணி பையை இரும்பு தூணோடு அமர்த்தி விட்டு சாய்ந்தேன்.
குழந்தையின் அழுகை சத்தம் ஒரு புரம்...
இரயில் நகரும் சத்தம் மறு புரம்...
கலைப்பின் கருணையால் அந்த சத்தத்திலும் கண் அசந்து விட்டேன்.
தூக்கம் கலைந்து எழுந்து சற்று நிமிர்ந்தேன்...
ஒரு தாமரை தோட்டமே என் முன் அமர்ந்திருந்ததாய் உணர்ந்தேன்.
ஸ்தம்பித்துப் போனது என் இதய ஆலை.
தப்பிக்க முயன்றது கண்கள் அந்த வேளை...
பெண்களில் எந்த வகை பெண் அவளோ..?
பூவின் கருவில் பிறந்திருப்பாளோ..?
வானவில் பரம்பரையிலிருந்து வந்திருப்பாலோ..?
பிரம்மனும் கடும் பயிற்சி எடுத்து வடித்த பிரம்மோவியமோ..?
எந்த ஸ்டொபில் ஏறிய பறவையோ..?
என் இதயத்தை அந்த இரயிலின் வேகத்தை விட பல மடங்கு ஓட வைக்கிறாள்.
கண்களில் ஒரு வெளிச்சம்...
வைட்டமின் 'D' சூரியனிடமிருந்து கிடக்கும் என்று படித்ததாய் ஞாபகம்.
இன்னும் எத்தனை எத்தனை வைட்டமின்கள் மிச்சம் இருக்கிறதோ,,,
அத்தனையும் அந்த நொடி கண்களில் உதயம்.
அவள் தோழியோடு அளவளாவிய போது அரங்கேறியே அற்புத வார்த்தைகள்...
காதுகளுக்கு இனிய இசை கச்சேரிகள்.
அந்த சர்க்கரை சொற்களுக்கு இல்லை ஈடானகவிதை வரிகள்.
என் ஆயுலின் நாழிகைகள்
அவளை பார்த்துக் கொண்டே காலங்கள் முடிந்திட கூடாதா.
அக்கரையில் அவள் இருக்க அக்கரையாய் பார்க்கிறது இக்கரையில் என் கண்கள்.
எக்கரையில் இறங்க போகிறாளோ,,,
மனம் அக்கரையாய் கேட்கிறது.
அவள் இறங்கக் கூடிய ஸ்டோப் வந்தது...
இறங்கினாள்,,,
என் இதயமும் உடன் இறங்கியது.
அன்று முதல் நான் அதை தேடுகிறேன் கிடைக்க மாட்டேங்குது.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:04 PM 2 கருத்துகள்
வெள்ளி, 13 மார்ச், 2009
எல்லா புகழும் உனக்கே.

(இசை புயல் a.r.ரஹ்மன் ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பெருமையில் ஒரு தமிழன் என்ற முறையில் நான் வாழ்த்த விளைந்த வரிகள்)
அண்டமே அசந்து பார்க்கும் 'ஆஸ்கர் அரசனே'...
ஆஸ்காரயே அசர வைத்த உன்னை,,,
ஆஸ்கர் அரசன் என்று அழைக்காமல்...
வேறு எப்படி அழைப்பது?
இசைக் கலைஞனே,,,
நீ தொட்டது தகரம் அல்ல...
சிகரம்.
அதுவும் ஒன்று அல்ல,,,
இரண்டை சுமந்து நின்றது உனது இரு கரம்.
நீ உண்மையில் விருதுக்ள் காய்க்கும் விசித்திர மரம்.
தென்றலாக தவழ்ந்து இன்று புயலென எழுந்து நிற்கும் இசைப் புயலே...
உன் திறமைக்கு இன்று தான் பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
உன் திறமை இன்று தான் திரை வானில் திரை போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
ரோஜாவில் தொடங்கி இன்று வரைக்கும் ஓர் இசை ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவனே...
இன்று இந்த உலக மண்ணிலே உனக்காக ஒரு சரித்திரமே எழுதப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
சரித்திரமே உன்னை தன் பதிவேட்டில் எழுதிக் கொண்டது.
உலக அரங்கில் நீ விருதுகள் வாங்கினாய்...
நாங்கள் எல்லாம் உன்னால் பெருமை கொண்டோம்.
அதே அரங்கத்தில் நீ தமிழில் முழங்கினாய்...
தமிழே பெருமை கொண்டது.
இசைக்கு புகழ் என்று மற்றொரு பொருளும் உண்டு...
அந்த புகழுக்கே புகழ் சேர்த்த உன்னை...
இசை தமிழில் குளிப்பாட்ட காத்திருக்கிறது உலகமே திரண்டு.
இவ்வளவு பெருமையை பெற்று விட்டு...
எவ்வளவு பொறுமை உனக்கு.
உனது திறமைக்கு,,,
போதாது இந்த ஒரு விருதளிப்பு.
ஆங்கில நாளிதழ்களும்,
வார இதழ்களும்,
விருப்பப்படி எழுதின...
நீ 'இந்தி' திரை இசை உலகைச் சார்ந்தவன் என்று.
சவுக்கடி கொடுத்தாய் அந்த ஊடகங்களுக்கு,,,
உன்னை வளர்த்தது தமிழ் திரை உலகம் என்று...
அந்த மேடையில் நின்று.
ஆஸ்கார் தமிழனே,,,
நீ சொன்னது ஒரே ஒரு வரியாக இருக்கலாம்...
ஆனால் அந்த ஒரு வரி தான் இந்த உலக தமிழர்களுக்கு முகவரி.
இசை இளவரசனே...
நீ நடந்து வரும் பாதை எங்கிலும் முரசு கொட்டும்.
கலைவானியே கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதம் உன் வீட்டு கதவை தட்டும்.
இந்த நூற்றாண்டு அல்ல...
இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னை பற்றி தான் தமிழ் உள்ளங்களின் இதழ்கள் முணுமுணுக்கும்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 9:29 PM 7 கருத்துகள்
வியாழன், 12 மார்ச், 2009
புனிதமான பூக்கள்
ஏன் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் முக ஒப்பணை செய்துக் கொள்வதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் என்றுமே வாசம் வீசுகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் வாசனை திரவியம் பூசிக்கொள்வது இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் வண்ண வண்ணமாய் விளைகின்றீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் நீங்கள் குடை பிடிப்பதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய் பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் ஊமையாய் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று மற்றவர்களை புறம் பேச உங்க்களுக்கு அவசியம் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உதிர போகும் நாளை நீங்கள் நினைப்பதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் எங்களால் போற்ற படுகிறீர்கள் தெரியுமா..?
உங்களைப் போன்று புனிதமாய் நாங்கள் கொஞ்சம் கூட இல்லை
இடுகையிட்டது சுவரன் நேரம் 10:05 PM 2 கருத்துகள்
புதன், 11 மார்ச், 2009
ஒரு பட்டதாரியின் சாபம்

பட்டம் படித்தோம்...
பட்டறையில் வேலை செய்வதற்கா..?
இலட்சியத்தோடு படித்தோம்,,,
எச்சில் பாத்திரம் கழுவுவதற்கா..?
நாங்கள் கற்ற கல்வி...
எங்கள் திறமைகள்...
எல்லாம்.
குப்பை தொட்டியில் போடுவதர்க்கா..?
நாங்கள் கற்ற கல்வியே எங்களுக்கு கேள்விக்குறியாய் போனதே...
வேள்வி எத்தனை நாங்கள் கொண்ட போதிலும்,,,
தோல்வி மட்டுமே எங்களை தழுவிக் கொண்டதே...
கண்ணீரே எங்கள் கண்களை கழுவி கொண்டதே.
கடையில் வாங்கிய பட்டம் கூட சுதந்திரமாய் பறக்கிறது...
கடன் வாங்கி,,,
சுமை தாங்கி,,,
நாங்கள் பெற்ற பட்டம்...
எங்கோ ஒரு மூளையில் கிடக்கிறது...
அடிக்கடி எங்களைப் பார்த்து சிரிக்கிறது.
எத்தனைப் படிகள்..?
நான் ஏறி இறங்கியது.
எத்தனை வாசல்கள்..?
எங்களை வேண்டாம் என்று தள்ளியது.
கண்ணீர் மட்டும் தற்போதைக்கு எங்களிடத்தில் மிச்சம் உள்ளது.
வேலை கிடைக்காதது எங்களின் குற்றமா..?
விலை மாதார்களே இங்கே விலை போகும் போது,,,
எங்களின் நிலை அதை விட கேவலமா..?
பட்டப்படிப்பு முடித்தும் ஒரு தட்டு சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடும் எங்களின் நிலை...
யார் விதிப்பார் எங்களுக்கு விலை..?
என் மனசாட்சியின் வாயை கூட அடைத்து விட்டோம்...
சொந்த பந்தங்களின் வாயை எப்படி அடைப்பது..?
குத்தி குத்தி காட்டும் அந்த கல்லி நாக்குகளை கடவுள் நீக்காமல் தான் வைத்திருக்கிறான் இன்னும்.
நூலை கற்றவனுக்கு வேலை இல்லை என்று சொல்லும் முதலாளிகளை வாழ்த்திக்கொண்டு தான் இருக்கிறான் கடவுள் இன்னும்.
பத்தினி சாபம் சும்மா விடாது என்பார்கள்...
அது போல எங்களின் பட்டினி சாபமும்,,,
சம்மந்த பட்டவர்களே உங்களை சும்மா விடாது.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:44 PM 4 கருத்துகள்
ஞாயிறு, 8 மார்ச், 2009
உன் பிரிவு...என் உயிரின் மறைவு

பேசாதே பெண்ணே,,,
நீ பேசினால் பெருமளவில் உலக இரகசியங்கள் அம்பலப் படலாம்.
பார்க்காதே நிலவே,,,
நீ பார்வை வீசினால் இரவு நிலை குழைந்து போகலாம்.
நடக்காதே நதியே...
நீ நிலவின் வீதியில் நடந்தால் வெட்கப் பட்டு மீன்களும் வயதுக்கு வரலாம்.
இமைக்காதே இமையே,,,
நீ கண் அசைத்தாலே விண்மீன்கள் உன் கண்களிலிருந்து விண்ணுக்கு புறப்படலாம்.
உலராதே உறவே,,,
உன் உலரலில் சிதறிய உமிழ்கள் தமிழுக்கு உவமைகள் ஆகலாம்.
அழாதே அழகே,,,
உன் ஒரு துளி கண்ணீர் விழுவதால் ஆற்று நீர் கூட உப்பு கரிக்கலாம்.
பிரியாதே பூவே,,,
உன் பிரிவை தாங்க முடியாமல் என் உயிரும் என் உடலை விட்டு பிரிந்து போகலாம்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 5:11 PM 0 கருத்துகள்
புதன், 4 மார்ச், 2009
காதல் எனும் ரயில் பயணம்

தண்டவாளத்தில் பயணிக்கும் இரயிலின் வண்டவாளம் தெரியுமா உங்களுக்கு..?
அதை வைத்தே காதலின் எதிர்காலத்தை சொல்கிறேன் உங்களுக்கு.
போகும் இடம் போகுது...
பொல்லாத ரயில் இது.
விபரீதம் அறியாத வினைகளை வண்டி வண்டியாய் அள்ளி கொண்டு போகும் நீளமான தொடர்கதை இது.
சமயம் பார்த்தா இரயில் தடம் புரள்கிறது..?
எதுவுமே தெரியாமல் தானே அது நிகழ்கிறது.
காதலும் அது போலவே...
வருவதை அறியாது,,,
மோதுவதை உணராது...
நெஞ்சமும் தடம் புரண்டு விடுகிறது.
நேரம் காலம் தெரியாமல் இரயில் 'horn' அடித்துக் கொண்டே போகும்...
அது ஏன் தெரியுமா..?
காதலர்களே ஜாக்கிரதை.
நாங்கள் வருகிறோம் கடத்தி செல்ல உங்கள் மனதை.
இரயில் பயணத்தில் இத்தனை 'stop'கள் இருப்பது போல...
காதலின் பயணத்திலும் 'stop' கள் உண்டு.
எந்த பயணியும் முதலில் ஏறி முடிவில் இறங்கியதில்லை.
காதலும் அது போல...
எந்த காதலும் முதல் காதல் இல்லை...
எந்த முதல் காதலும் முடிவில் ஜெயிக்கும் என்று சாத்தியம் இல்லை.
இரயிலின் இருக்கைகள்.
1st class...
2nd class...
சொகுசு வாரியாக ஒதுக்கப் பட்டது போல...
காதலும் காசு, வசதி இவைகளை பார்த்து இடம் மாறலாம்.
காதலின் பயணமும்...
இரயிலின் பயணமும்...
ஒன்று தான் நீங்கள் நம்பனும்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 10:31 PM 0 கருத்துகள்
திங்கள், 2 மார்ச், 2009
யாரெல்லாம் அடிமைகள்..?
மாமனார் வீட்டுக்கு மாப்பிள்ளையாய் போனவன்...
தனது உரிமையை தொலைத்த அடிமை.
கந்து வட்டிக்கு கடன் வாங்கியவன்...
வட்டியை கூட கட்ட முடியாமல் மண்டி போடும் அடிமை.
பணக்காரர்கள் கூட்டத்தில் ஓர் எழை...
தனது சுயமரியாதையை விட்டுக் கொடுத்த அடிமை.
நாட்டை விட்டு ஒதுக்க பட்ட அகதிகள்...
தன் தற்க்காலிக கூட்டுக்கு அடிமை.
பணத்தின் மீது மனம் வைத்தவன்...
பணத்துக்கு அடிமை.
தாலி கழுத்தில் ஏறியதும்,,,
மனைவி கணவனுக்கு அடிமை.
சமையல் கட்டுக்கு சீதனமாய் போன மங்கையர்கள்...
மற்ற நேரம் சீரியலுக்கு அடிமை.
மாதச் சம்பளம் வாங்குபவன்,,,
தன் முதலாளிக்கு அடிமை.
இவை யாவுமே காலம் உருவாக்கிய அடிமைகள்.
உயர்வானே அடிமைகள்...
இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்கள்.
காலம் முழுவதும் கடமை பட்ட அடிமைகள்.
நாம் யாவரும் கடவுளின் அடிமைகள்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 2:05 PM 0 கருத்துகள்
ஞாயிறு, 1 மார்ச், 2009
ஊமை காதலன்
உண்மை சொல்ல தெரியல...
பொய்யையும் மெல்ல முடியல...
கர்பமாகி போன என் சின்ன இதயத்திலோ,,,
இனி வேறொரு கருதரிக்க வழியில்ல.
காதலிக்கத் தெரிந்த பாவிக்கு,,,
காதலை மொழிய மொழி இல்ல.
ஒப்பிக்கவும் முடியல...
தப்பிக்கவும் முடியல...
ஒப்புதல் வாங்காமல் நுழைந்த காதலுக்கு,,,
தப்பு எதுவென்று தெரியல.
போதுமே...
போதுமே...
நான் பொறுத்தது போதுமே.
வருத்தமாய் சொல்கிறேன்,,,
உன்னிடம் நான் காதலை சொல்லாதது தான் பெரும் பாவமே.
இதயத்தில் வந்து விழும் ஆகாயமே...
உன் பாரம் தாங்காது அழுதிடும் என் மனமே.
மௌனம் என்ற ஒன்று,,,
கடவுள் எனக்காய் தந்த வரமே...
அதுவே எனக்கு விஷமானது தினம் தினமே.
உயிராய் உன்னை நினைத்தவன்,,,
உயிர்வரை சென்று வார்த்தைகள் தேடுகிறேன்.
வார்த்தைகள் இல்லயென்று,,,
கல்லறை தேடுகிறேன்.
கவிதை நூறு எழுதியிருக்கிறேன்...
அகரங்களை அடிவரை தோண்டி எடுத்திருக்கிறேன்...
உன்னை எதிர் கொள்ளும் போது மட்டும் எதுகையும்
இடுகையிட்டது சுவரன் நேரம் 4:56 PM 2 கருத்துகள்
வியாழன், 26 பிப்ரவரி, 2009
வியக்க வைக்கும் இயற்கையே.

இயற்கையே...
வியக்க வைக்கும் இயற்கையே.
வெளுக்கச் சொல்லு உன் கிழக்கையே...
அந்தி சிவக்கயிலே அணைக்கச் சொல்லு வான் விளக்கையே.
இரவையும் தந்தாய்...
பகலையும் தந்தாய்...
இந்த உயிர்களுக்கு விருந்தாய்.
நேரம் தாழ்த்தாது இயங்குகிறாயே,,,
உன் கடமை தவறா கடிகாரத்தை நீ எங்கே வாங்கினாய்.
விண்ணிலிருந்து கண்ணடிக்கும் வெள்ளி பூக்கள்...
எண்ணி முடிக்க இயலாமல் தோற்றுப் போவது இன்னும் எத்தனை நாட்கள்..?
தென்றலின் இசைக்கு விருப்பம் போல அபிநயம் பிடிக்கும் விருட்சங்கள்.
பூப்பதும்...
பின்பு உதிர்வதும்.
காய்ப்பதும்...
பின்பு கணிவதும்...
இப்படி கணக்கில்லாத ஆச்சர்யங்கள்.
மண்ணை நனைக்கும் மழை துளி...
வானமும் பூமியும் உறவாடி கொல்லும் இந்த விசித்திரமான வழி.
மேக கூட்டத்தில் எவர் ஒலித்து வைத்தார் இவ்வளவு பெரிய வாலி..?
நடமாடும் பாறைகள் அங்கே நடப்பட்டனவோ,,,
மழையோடு சேர்ந்து பாறைகள் மோதும் பேரொளி.
எண்ணி வைத்தார் போல ஒன்பது கிரகங்கள்...
அவை வலம் வர அதி நவீன சாலைகள்.
பொறியியல் பட்டப் படிப்பு எங்கே நீ கற்றாய்..?
சொல்ல சொல்ல சளிக்கவில்லை இது போன்ற உனது சாதனைகள்.
இவைகளை எல்லாம் விடு...
மனிதன் என்ற மஹா படைப்பு...
இதை போல இல்லை ஒரு பிறப்பு.
சதைகள் கொண்ட இந்த விதைப்பு...
இதற்காகவே நடத்த வேண்டும் உன் திரமையை பாராட்டி ஒரு பட்டமளிப்பு.
இயர்க்கை இயவுளே,,,
இயக்குகிறாய் என் மண்ணை யே...
இயற்றுகிறாய் விண்ணை யே...
ஈடு இனையில்லா அன்னையே,,,
வணங்குகிறோம் உன்னையே.
இடுகையிட்டது சுவரன் நேரம் 7:42 PM 0 கருத்துகள்
புதன், 25 பிப்ரவரி, 2009
எது நிரந்தரம்..?
நிரந்தரம்...
எது நிரந்தரம்..?
நகர்ந்திடும் இந்த வாழ்க்கையில்...
எது நிரந்தரம்..?
சுழன்றிடும் இந்த பூமியில்...
எது நிரந்தரம்..?
பூமடி தாங்கும் அந்த பனித்துளி நிரந்தரம் தானோ..?
அதிகாலை ஆதவன் வந்து கையோடு கூட்டிக்கொண்டு போய்விடும் தானே..?
பூமிப்பந்தை நனைக்கும் பனித்துளிகள் நிரந்தரம் தானோ..?
மழையின் கருணை கொஞ்ச நேரம் தான்,,,
வந்த வேகத்திலேயே மறைந்திடும் தானே.
சொந்தம்...
பந்தம்...
எல்லாம் நிரந்தரம் தானோ..?
காசு பணம் வந்ததும் மனிதனின் கண்கள் உறவை மறந்திடும் தானே..?
மனிதனின் கதையில் இன்ப துன்பம் நிரந்தரம் தானோ..?
இன்பம் சில காலம்...
துன்பம் சில காலம்...
பருவ காலங்கள் போல மாறி மாறி நம்மை ஆட்டி வைப்பது இவ்விரண்டும் தானே..?
இந்த உடலில் உயிர் நிரந்தரம் தானோ..?
அந்த உயிரை இரவல் தந்த யுவனே அதற்க்கான காலாவிதியையும் வைத்தான்.
உயிர் உடலை விட்டு மீழும் போது,,,
உடல் வெரும் கூடு தானே..?
நிரந்தரம் இல்லா இந்த உலகத்திலே...
வரம் கேட்பது ஏன் தானோ..?
இருப்பதை வைத்துக்கொண்டு,,,
தரமானதாய் நம் வாழ்க்கயை வடிவமைத்துக் கொள்வது நம் கடமை தானே.
இடுகையிட்டது சுவரன் நேரம் 12:57 PM 2 கருத்துகள்
திங்கள், 23 பிப்ரவரி, 2009
நீயா...?
தேனை கறந்தது..?
மலரோ,,,
சட்டென விரிந்தது.
நீயா காற்றில்,,,
ஈர பதமாய் புகுந்தது..?
தென்றலும் அதில் குளித்து மகிழ்ந்தது.
நீயா நிலவில்,,,
ஏறி நின்று குடை பிடித்தது..?
அனுதினம் உன் தரிசனம் வேண்டி அது ஒற்றை காலில் நிற்கிறது.
நீயா குயிலுக்கு,,,
பாட கற்று கொடுத்தது..?
உனக்கு குரு வணக்கம் செலுத்தி விட்டு தான் அது பாட துவங்குகிறது.
நீயா கணவில்,,,
என்னை பார்த்து கண் அடித்தது..?
நனவிலும் அது வேண்டும் என்று கண்கள் அடம் பிடிக்கிறது.
நீயா உயிரிலே,,,
கலகம் புரிந்தது..?
என் உயிரோ,,,
என்னை விட்டு விட்டு உன் உயிரோடு வந்து கலந்தது.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:07 PM 5 கருத்துகள்
வெள்ளி, 20 பிப்ரவரி, 2009
தமிழ் ஈழத்தின் ஓலம்



(நான் சுமந்த அதே தமிழ் இரத்தம் சிதைந்த அந்த பூமிக்கு இந்த கவிதை அஞ்சலி ஒரு சமர்ப்பணம்)
இங்கே பூக்கள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன...
மண் தரையில் உதிரங்கள் படிந்திருக்கின்றன.
இவை உதிர்ந்த பூக்கள் அல்ல...
உதிர்த்தப்பட்டப் பூக்கள்.
போர்க்களங்களால் தகர்க்கப்பட்ட பூக்களங்கள்.
தலையெழுத்தை எழுதத் தெரியாத பேதைகள் மீது அணுகுண்டு.
கால் வயிற்று கஞ்சிக்கே வழியில்லாத ஏழைகள் நெஞ்சில் துப்பாக்கி குண்டு.
கறுவறை ஈரம் கூட இன்னும் காயவில்லை...
குண்டுகளுக்கு இரையாகி மழழை பிணம்.
எங்கே தான் போகும் இந்த பாவப் பட்ட ஜனம்..?
இனம் அழிந்தும் இன்னும் போகவில்லை இரத்த மணம்.
மாதர்கள் கண்களில் கண்ணீர் இல்லை...
இரத்தம் கசிகிறது.
இத்தனை பிணங்களை குவித்தப் பின்னரும்,,,
படை தலைவனுக்கு இன்னும் பசிக்கிறது.
வேட்டையாட வந்தவனின் காமப் பசிக்கு அடிமை பெண்களின் நிலவரம்,,,
கொடுமையான கொடூரம்.
இது வீரர்களின் வீர சாகசம்.
காக்க வேண்டியவனே கடித்து குதறுவது என்ன நியாயம்..?
உங்களுக்கும் நாய்களுக்கும் என்னடா வித்தியாசம்..?
வட்ட மேஜைகள் இருக்கு...
குளு குளு குளிர்சாதனம் இருக்கு...
கண்ணாடி கோப்பையில் தண்ணீர் இருக்கு...
இத்தனையும் எதற்கு..?
தலைவர்களுக்கிடயே கைக்குலுக்கு.
வெட்டியாக மானாடு...
முதலில் அந்த பிஞ்சு பிணங்களை புதைக்க ஒரு வெட்டியானை தேடு.
முடிவுக்கு வராத அமைதி ஒப்பந்தம்...
அகதிகளின் அவலை உடல்களை எறிக்க யார் பிடிக்கப் போகிறார்கள் தீ பந்தம்..?
அணுகுண்டுகளுக்கு பலியாகும் அணுக்களுக்கு,,,
தூரத்திலிருந்து அனுதாபம் மட்டும் போதுமா..?
மக்கள் செத்துப் பிழைக்கும் இந்த மண்ணுக்கு பெயர் தான் சுதந்திரமா..?
உரிமை கொண்டாடுவதர்க்கு போர் தான் வழியா..?
தலைவனின் வீர விளையாட்டுக்கு அப்பாவி மக்கள் பலியா..?
ஹேய் தலைவா...
அந்த இறைவன் தருவான் ஒரு நாள்,,,உன் கொடுமைக்கு நிகரான கூலியா.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:17 PM 4 கருத்துகள்


