CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மழலை லீலைகள்


முடிந்தவை எல்லாம் வாழ்க்கை குறிப்பில் சரித்திரம் ஆகுமே...

கல் வெட்டுகள் போலே.
கடந்தவை எல்லாம் பத்திரமாக இதய பதிவேட்டில் அடங்குமே...
இசைத் தட்டு போலே.
மறையாது...
ஆழியாது...
பதிந்து விட்ட நினைவலைகள்,,,
என்றாவது ஒரு நொடி இலேசாக இறக்கை விரித்து விட்டுப் போகும்...
சிந்தையிலே.

சில நேரம் சிரிக்கத் தோன்றும்...
சில நேரம் அழுதிட தோன்றும்...
அந்த பருவ கால ஞாபகங்கள் நம்மை நினைக்கச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்றும்.

பேசிய மழலையின் அர்த்தம் புரியாது...
ஆடிய ஆட்டத்தின் முடிவு அறியாது...
கண்ட காட்சிகளின் சாட்சி தெரியாது...
இந்த உணரா பருவம் இல்லையென்றால்,,,
மனித வாழ்க்கை நிறையாது.

ஏன் வந்தோம்..?
எதற்க்கு வந்தொம்..?
என்ற வினாவையும் விதைக்காத,,,
பதிலையும் புதைக்காத பருவம்...
ஒரு விசித்திரமான விளையாட்டு மைதானம்.

கள்ளம் இல்லா வெள்ளை மனம்...
கபடம் இல்லா பிள்ளை மனம்...
எங்கு வாங்கினோம்..?
குழந்தை பருவம் என்பது,,,
மகிழ்ச்சி மொட்டுகள் மட்டுமே பூக்கும் பூங்காவனம்.

கவலைகள் இல்லை...
கலக்கம் இல்லை...
கனம் அறிந்த கண்ணீருக்கு அவசியம் இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லை...
எதிர்ப்புகள் இல்லை...
எதிரே நிற்பது எதுவும் எதிரிகள் இல்லை.

பறந்தாடிய பருவம்...
பருவ காற்றின் சூழ்ச்சியால் பறந்தோடிய மாயம்.
நெஞ்சை விட்டு மறந்தோடுமா..?
இது தான் வாழ்க்கை...
இது தான் சொர்கம்...
அது தான் மீண்டும் திரும்பி வருமா..?
காலம் தான் எனக்கு அந்த பழைய வாழ்க்கயை திருப்பி தருமா..?

புதன், 8 ஏப்ரல், 2009

தவன்... கிறேன்...

படித்தவன் எழுதுகிறேன்...

பொங்கி வரும் அவள் செந்தமிழ் இதழ்களைப் படித்தவன்,,,
இன்று கவிதை எழுதுகிறேன்.

வரைந்தவன் இரசிக்கிறேன்...
கற்பனையில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவன்,,,
அதே ஓவியம் என் முன்னாடி நின்ற போது கண் அசைக்காமல் இரசிக்கிறேன்.

பார்த்தவன் வேர்க்கிறேன்...
இது வரை கண்டிராத அவள் அழகை பார்த்தவன்,,,
விழிகள் வேர்க்கிறேன்.

மறந்தவன் நினைக்கிறேன்...
மண் மீது நான் வாழ்ந்ததையே மறந்தவன்,,,
அவள் என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டும் அடிக்கடி நினைக்கிறேன்.

இறந்தவன் பிறக்கிறேன்...
அவளது முதல் பார்வையில் மூச்சு திணறி போய் இயந்தவன்,,,

மறுபடி ஒரு பார்வை பார்த்தால்...
மீண்டும் பிறக்கிறேன்.

காதலித்தவன் பேதலிக்கிறேன்...
அவள் முகவரி அறியாமல் அவளை காதலித்தவன்,,,

என் முகவரி தெரியாமல் இன்று பேதலிக்கிறேன்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

"மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...



"குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல"

இது பழய உவமை.
"
மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...
இது புதுமை.

உலகம்,,,
அழகான உருண்டை வீடு...
அதிலே எத்தனை எத்தனை கூடு.
இறைவன் இரவல் தந்த இருப்பிடம் அது.
அதனை அலங்கரிப்பதும்...
அதன் அழகை பறிப்பதும்...
மானிடா உன் பாடு.

அதன் ஒவ்வொரு சீற்றத்துக்கும் நீ தான் தர வேண்டும் இழப்பீடு.
வானம் என்னும் வெள்ளி தகடு...
பூமி பந்துக்கு அதுவே முக்காடு.
அது அனுமதி தந்தால்,,,
நீ ஆனந்த நீராடு.
அந்த மேக கருவறையும் இன்று கதி கலங்கி போய் நிற்கிறது கண்ணீரோடு.

செயற்க்கையை உருவாக்கினாய்...
உன் சௌகர்யத்துக்கு.
இயற்க்கையை அதற்கு இறையாக்கினாய்...

உன் சந்தோஷத்துக்கு.
நாளை இந்த உலக வழக்கை கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா..?
வினை செய்தவனே,,,
பலன் வந்து சேறும் உனக்கு.

உயர கட்டிடன்கள் உயர்த்தினாய்...
காடுகள் பலியானது.
காற்றின் உஷ்ன தன்மை உயர்ந்தது.
சொகுசாக செல்ல வாகனங்க்கள் உற்பத்தி செய்தாய்...
அது புகையை துப்பியது.
காற்றோ விஷ வாயுவை கக்கியது.

வானத்தில் ஒரு வாசல்...
"
ஓசொன்" படலத்தின் விரிசல்.
யார் போட்டது..?
இயற்க்கையின் விதியா..?

இல்லை,,,
மனிதனின் சதியா..?

சுனாமி...
பூகம்பம்...
சூராவளி...
உயிர்களை பலி கேட்டது.
இயற்க்கையின் சதியா..?

மனிதனின் கதியா..?

சுயநலம் நமக்கு வளம் இல்லை மானிடா...
நீ  இயற்கை அழிக்க இங்கே மரண ஓலம் அதிகரிக்கும் பாரடா.
நீ பிறந்த மண்ணை நீ மதிக்கா விட்டால்
மானிடா...
இயற்க்கையும் நம்மை பழிக்கும்...

இயற்க்கையும் நமது தோழன் தான் என்று புது உறவு கொடு,,,

இயற்க்கை உன்னை கட்டி அனைக்கும்.

உலகத்துக்கு நன்மை பயக்கும்.

வியாழன், 2 ஏப்ரல், 2009

உதிராத உறவு



நட்பு...
அந்த சொல்லுக்கு எத்துனைச் சிறப்பு.

சினேகம்...
அது சொர்க்கத்தில் உருவான ஒரு வேதம்.

தோழமை...
அது இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களும் கட்டாயம் உருவாக்கிக் கொள்ளும் உரிமை.

காதல் என்பது குறிப்பிட்ட வயதில் தான் மோதி செல்லும்...
சொந்தம் கூட சொல்லாமல் கொல்லாமல் ஒளிந்து கொல்லும்...
நட்பு என்பது அப்படி அல்ல,,,
குழந்தை பருவத்திலும் விளையாடி செல்லும்...
அரியாத வயதிலும் அலையாய் மோதிச் செல்லும்...
வாலிப வர்கத்திடம் விரும்பி அறும்பி கொல்லும்...
முடி நரைத்தாலும் நட்பு மட்டும் நரைக்காமல் இன்னும் நன்றியை மெல்லும்...
எமனிடம் சென்று முறையீடு செய்து,,,
மரணத்தையும் வெல்லும்.