CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

புதன், 11 மார்ச், 2009

ஒரு பட்டதாரியின் சாபம்


பட்டம் படித்தோம்...
பட்டறையில் வேலை செய்வதற்கா..?
இலட்சியத்தோடு படித்தோம்,,,
எச்சில் பாத்திரம் கழுவுவதற்கா..?
நாங்கள் கற்ற கல்வி...
எங்கள் திறமைகள்...
எல்லாம்.
குப்பை தொட்டியில் போடுவதர்க்கா..?

நாங்கள் கற்ற கல்வியே எங்களுக்கு கேள்விக்குறியாய் போனதே...
வேள்வி எத்தனை நாங்கள் கொண்ட போதிலும்,,,
தோல்வி மட்டுமே எங்களை தழுவிக் கொண்டதே...
கண்ணீரே எங்கள் கண்களை கழுவி கொண்டதே.

கடையில் வாங்கிய பட்டம் கூட சுதந்திரமாய் பறக்கிறது...
கடன் வாங்கி,,,
சுமை தாங்கி,,,
நாங்கள் பெற்ற பட்டம்...
எங்கோ ஒரு மூளையில் கிடக்கிறது...
அடிக்கடி எங்களைப் பார்த்து சிரிக்கிறது.

எத்தனைப் படிகள்..?
நான் ஏறி இறங்கியது.
எத்தனை வாசல்கள்..?
எங்களை வேண்டாம் என்று தள்ளியது.
கண்ணீர் மட்டும் தற்போதைக்கு எங்களிடத்தில் மிச்சம் உள்ளது.

வேலை கிடைக்காதது எங்களின் குற்றமா..?
விலை மாதார்களே இங்கே விலை போகும் போது,,,
எங்களின் நிலை அதை விட கேவலமா..?

பட்டப்படிப்பு முடித்தும் ஒரு தட்டு சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடும் எங்களின் நிலை...
யார் விதிப்பார் எங்களுக்கு விலை..?

என் மனசாட்சியின் வாயை கூட அடைத்து விட்டோம்...
சொந்த பந்தங்களின் வாயை எப்படி அடைப்பது..?
குத்தி குத்தி காட்டும் அந்த கல்லி நாக்குகளை கடவுள் நீக்காமல் தான் வைத்திருக்கிறான் இன்னும்.
நூலை கற்றவனுக்கு வேலை இல்லை என்று சொல்லும் முதலாளிகளை வாழ்த்திக்கொண்டு தான் இருக்கிறான் கடவுள் இன்னும்.

பத்தினி சாபம் சும்மா விடாது என்பார்கள்...
அது போல எங்களின் பட்டினி சாபமும்,,,
சம்மந்த பட்டவர்களே உங்களை சும்மா விடாது.

4 கருத்துகள்:

neetha சொன்னது…

Thangalin kaviteigalai padipatharku arumaiyaka irukirathu. Thangalin puthu puthu sinteneikaluku enathu valthukal. Melum pala sirentha kaviteigalai varaiye valthukiren swaran avargale.

நிலா சொன்னது…

வணக்கம் ஸ்வரன்...
இன்றைய பட்டதாரியின் நிலையை மிகவும் அழகாக சொல்லி, படிக்கும் அத்தனை நெஞ்சங்களையும் நெகிழ வைத்திருக்கும் உமது கவிதைக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான கவிதை... ஆனால் அதில் இருக்கும் சில எழுத்துப் பிழைகளை நிவர்த்தி செய்துவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

சுவரன் சொன்னது…

VANAKKAM NEETHA.

YHANGGALIN KARUTHTHURAIGHALAI NAAN KARUTHTHOONRUM BOTHU ENAKKU AANANTHAMAAGHAVUM PERUMAYAAGAVOM ULLATHU.

THANGGALIN VAARTHAIGHALe EN THIRAMAYAI NIVARTHI SEYYUM MAATHTHIRAIGHAL
NANDRI.

சுவரன் சொன்னது…

VANAKKAM NILAA THOLI...

EN KAVITHAI THANGGALATHU MANATHAI NEGHILAE VAITHTHIRUPPATHU EN KAVITHAIKKU KIDAITHTHA VETRI.
UNMAYAANA UNARVIGHALAI SOLLUM KAVITHAYE MATRAVARGHALIN MANATHIL PATHIYUM ENBATHANAI NAAN NANGU PURINTHU KONDEN

KAVITHAYIL KANDULLAE ELHUTHTHUP PILAHIGHALUKKU MIGHAVIM VARUNTHUGHIREN.

VIRAIVIL THIRUTHTHAM SETHU VUDUGHIREN.
NANDRI THOLI.