CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

செவ்வாய், 31 மார்ச், 2009

நட்பின் நெறி



நட்பு ஒரு நல்ல கவிதை...
பேனா முனையில் அது உறங்கிக் கொண்டிருக்கும் வரை.
அட்சரமாய் வந்து விழுந்து விட்டால்,,,
அது குருடன் கையில் கிடைத்த நிலை.

நட்பு ஒரு வீணை...
எந்த கரங்களாவது மீட்டி கொண்டிருக்கும் வரை.
மீட்ட யாரும் இல்லாத வேளையில்,,,
அதன் இருப்பிடம் வீட்டில் ஒரு மூலை.

நட்பு ஒரு பரவச பூக்களின் தோட்டம்...
அது வாடாத வசந்த நாள் வரை.
வாசம் அங்கே குறைந்து விட்டால்,,,
நட்புக்கும் நாளை இங்கில்லை.

நட்பு என் உயிர் நாடி...
நட்பு என் சுவாசம்...
இதன் உண்மை எல்லாம் அதை உறைப்பவனின் வாய் பேச்சு வரை.
இதயத்தை திறந்து பார்த்தால் எச்சில் கறை.

5 கருத்துகள்:

neetha சொன்னது…

Vanakam swaran avargalae.Enei pondru manithargalum thangalin kaviteikaluku nanbargalthan.

neetha சொன்னது…

Thangalin kavitei kalathil melum palae nalae padaipugalai padaike en valthukal.

சுவரன் சொன்னது…

vanakkam neetha.

manitharghal nanbarghal thaan aanaal avarghal kurughiya kaalaththukku nmattum thaan.iyarkkai pirappilirunthu irakkum varai nammoadu irikkirathu.aanaal athai manitharghal unarvathillai.

nandri neetah

நிலா சொன்னது…

வணக்கம் நண்பா,
ஏன் உனக்கு நட்பின் மீது இந்த திடீர் கோபம்????????

சுவரன் சொன்னது…

கோபம் எதுவும் இல்லை நிலா தோழி அவர்களே...

நட்பு என்ற பெயரில் நாடகம் ஆடி கொண்டிருக்கும் சில நன்பர்களுக்கு நான் சொல்ல எண்ணிய வரிகள் அவை.

உண்மையான நட்பு என்றுமே நிலைத்து நிற்கும்.

நன்றி நிலா தொழி.