(இசை புயல் a.r.ரஹ்மன் ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பெருமையில் ஒரு தமிழன் என்ற முறையில் நான் வாழ்த்த விளைந்த வரிகள்)
அண்டமே அசந்து பார்க்கும் 'ஆஸ்கர் அரசனே'...
ஆஸ்காரயே அசர வைத்த உன்னை,,,
ஆஸ்கர் அரசன் என்று அழைக்காமல்...
வேறு எப்படி அழைப்பது?
இசைக் கலைஞனே,,,
நீ தொட்டது தகரம் அல்ல...
சிகரம்.
அதுவும் ஒன்று அல்ல,,,
இரண்டை சுமந்து நின்றது உனது இரு கரம்.
நீ உண்மையில் விருதுக்ள் காய்க்கும் விசித்திர மரம்.
தென்றலாக தவழ்ந்து இன்று புயலென எழுந்து நிற்கும் இசைப் புயலே...
உன் திறமைக்கு இன்று தான் பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
உன் திறமை இன்று தான் திரை வானில் திரை போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
ரோஜாவில் தொடங்கி இன்று வரைக்கும் ஓர் இசை ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவனே...
இன்று இந்த உலக மண்ணிலே உனக்காக ஒரு சரித்திரமே எழுதப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
சரித்திரமே உன்னை தன் பதிவேட்டில் எழுதிக் கொண்டது.
உலக அரங்கில் நீ விருதுகள் வாங்கினாய்...
நாங்கள் எல்லாம் உன்னால் பெருமை கொண்டோம்.
அதே அரங்கத்தில் நீ தமிழில் முழங்கினாய்...
தமிழே பெருமை கொண்டது.
இசைக்கு புகழ் என்று மற்றொரு பொருளும் உண்டு...
அந்த புகழுக்கே புகழ் சேர்த்த உன்னை...
இசை தமிழில் குளிப்பாட்ட காத்திருக்கிறது உலகமே திரண்டு.
இவ்வளவு பெருமையை பெற்று விட்டு...
எவ்வளவு பொறுமை உனக்கு.
உனது திறமைக்கு,,,
போதாது இந்த ஒரு விருதளிப்பு.
ஆங்கில நாளிதழ்களும்,
வார இதழ்களும்,
விருப்பப்படி எழுதின...
நீ 'இந்தி' திரை இசை உலகைச் சார்ந்தவன் என்று.
சவுக்கடி கொடுத்தாய் அந்த ஊடகங்களுக்கு,,,
உன்னை வளர்த்தது தமிழ் திரை உலகம் என்று...
அந்த மேடையில் நின்று.
ஆஸ்கார் தமிழனே,,,
நீ சொன்னது ஒரே ஒரு வரியாக இருக்கலாம்...
ஆனால் அந்த ஒரு வரி தான் இந்த உலக தமிழர்களுக்கு முகவரி.
இசை இளவரசனே...
நீ நடந்து வரும் பாதை எங்கிலும் முரசு கொட்டும்.
கலைவானியே கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதம் உன் வீட்டு கதவை தட்டும்.
இந்த நூற்றாண்டு அல்ல...
இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னை பற்றி தான் தமிழ் உள்ளங்களின் இதழ்கள் முணுமுணுக்கும்.
7 கருத்துகள்:
ஆஸ்கார் வென்று தமிழுக்கும் தமிழனுக்கும் உலகெங்கும் பெருமை தேடி தந்த இசை தமிழனுக்கு,தாங்கள் அளித்த இந்த கவிதை அற்புதம். இவை அனைத்திலும் ரகுமானின் எளிமையும் அடக்கமும், என்னை மிகவும் கவர்ந்தன. அவருடைய கடவுள் பக்தியை என்னவென்று சொல்வதே தெரியவில்லை. அவர் கூறிய அந்த 3 வார்த்தைகள் இன்னும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. "எல்லா புகழும் இறைவனுக்கே", என்ன அற்புதமான கருத்து. வாழ்க ரகுமான், வாழ்க அவரின் இசை. வாழ்க தமிழ், வாழ்க தமிழன்.
Vanakam swaran avargalae... A.R.Rahman pathria tangalin kavitei varikal avaraku migavum poruthamanathage ulathu. A.R.Rahman unmeiyil inthiyergaluku kidaithe oru pokisem. Avaruku kideithe viruthu tamiluku perumai. Valga A.R.RAHMAN
Vanakam swaran avargalae. Thangalin A.R. Rahman pathriaya kavitei arputhamagae ulathu. A.R. Rahman avargal unmeiyil namaku kideithe oru pokisyem. A.R.Rahman avargaluku kidathe viruthu tamilukhu perumei. Valga A.R. Rahman ungel pugal
nanri sinthanayaalanea.
a.r. rahman tamilharghalin mile kall.
ulhagukkea tamilharghalai avar arimugappaduththiyirukkiraar.
avarukku verum paarattughal maththu pOataathu.
nandri tholarE
vanakkam neetha,,,
thaanggal kooriyathu mtrilum unmai.avar namakkellam kidaiththa pokkisham.
ulhaga arahghgil thamil maththu arangggeravillai thamilarghalum than.
athu namakkellam perumai.
வணக்கம் ஸ்வரன்,
புகழுக்கே புகழ் சேர்த்த புகழுக்கு உன் கவிதை இன்னொரு புகழாய் அமைந்துள்ளது.
நன்றி நிலா தோழி.
ரகுமானை போன்று இந்தியர்கள் பலர் அதே போன்று உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று பிரார்தனை செய்வோம்.
கருத்துரையிடுக