CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழ் ஈழத்தின் ஓலம்





(நான் சுமந்த அதே தமிழ் இரத்தம் சிதைந்த அந்த பூமிக்கு இந்த கவிதை அஞ்சலி ஒரு சமர்ப்பணம்)

இங்கே பூக்கள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன...
மண் தரையில் உதிரங்கள் படிந்திருக்கின்றன.
இவை உதிர்ந்த பூக்கள் அல்ல...
உதிர்த்தப்பட்டப் பூக்கள்.
போர்க்களங்களால் தகர்க்கப்பட்ட பூக்களங்கள்.

தலையெழுத்தை எழுதத் தெரியாத பேதைகள் மீது அணுகுண்டு.
கால் வயிற்று கஞ்சிக்கே வழியில்லாத ஏழைகள் நெஞ்சில் துப்பாக்கி குண்டு.

கறுவறை ஈரம் கூட இன்னும் காயவில்லை...
குண்டுகளுக்கு இரையாகி மழழை பிணம்.
எங்கே தான் போகும் இந்த பாவப் பட்ட ஜனம்..?
இனம் அழிந்தும் இன்னும் போகவில்லை இரத்த மணம்.

மாதர்கள் கண்களில் கண்ணீர் இல்லை...
இரத்தம் கசிகிறது.
இத்தனை பிணங்களை குவித்தப் பின்னரும்,,,
படை தலைவனுக்கு இன்னும் பசிக்கிறது.

வேட்டையாட வந்தவனின் காமப் பசிக்கு அடிமை பெண்களின் நிலவரம்,,,
கொடுமையான கொடூரம்.
இது வீரர்களின் வீர சாகசம்.
காக்க வேண்டியவனே கடித்து குதறுவது என்ன நியாயம்..?
உங்களுக்கும் நாய்களுக்கும் என்னடா வித்தியாசம்..?

வட்ட மேஜைகள் இருக்கு...
குளு குளு குளிர்சாதனம் இருக்கு...
கண்ணாடி கோப்பையில் தண்ணீர் இருக்கு...
இத்தனையும் எதற்கு..?
தலைவர்களுக்கிடயே கைக்குலுக்கு.

வெட்டியாக மானாடு...
முதலில் அந்த பிஞ்சு பிணங்களை புதைக்க ஒரு வெட்டியானை தேடு.

முடிவுக்கு வராத அமைதி ஒப்பந்தம்...
அகதிகளின் அவலை உடல்களை எறிக்க யார் பிடிக்கப் போகிறார்கள் தீ பந்தம்..?

அணுகுண்டுகளுக்கு பலியாகும் அணுக்களுக்கு,,,
தூரத்திலிருந்து அனுதாபம் மட்டும் போதுமா..?
மக்கள் செத்துப் பிழைக்கும் இந்த மண்ணுக்கு பெயர் தான் சுதந்திரமா..?

உரிமை கொண்டாடுவதர்க்கு போர் தான் வழியா..?
தலைவனின் வீர விளையாட்டுக்கு அப்பாவி மக்கள் பலியா..?

ஹேய் தலைவா...
அந்த இறைவன் தருவான் ஒரு நாள்,,,உன் கொடுமைக்கு நிகரான கூலியா.

4 கருத்துகள்:

ராஜ்குமார் சொன்னது…

"உரிமை கொண்டாடுவதர்க்கு போர் தான் வழியா..?
தலைவனின் வீர விளையாட்டுக்கு அப்பாவி மக்கள் பலியா..?"


This Lines are having real meaning to think over.Good Work Keep it up swaran.

பெயரில்லா சொன்னது…

tamizhanbane, tamizhai aangilathil karuturaippathaal emmai mannikkavum. um kavithaigal aazhamaagavum azhutamagavum uyirukkul irakkapattirupathupol emakku oru ennam. aanal, avai veatru mozhiyodu inainthu varuvathu satru ulavarutham alikkinrathu. aathlaal tamizhodu um unarvugalai parimaaru. aduthamurai tamizhodu santhikirean. nanri.

karuppu tamizhan.

சுவரன் சொன்னது…

தோழர் ராஜ்குமார் அவர்களுக்கு,,,

தங்களின் கருத்துரைகளுக்கு நன்றி தோழரே,,,

என் கவிதைகள் சிறப்பாக அமைவதற்கு தங்களைப் போன்றோரின் பாராட்டுக்களும் ஆதரவும் முக்கிய காரணம்.
இது போன்ற இன்னும் சமுதாய சிந்தனைகள் கொண்ட படைப்புகளை நிச்சயம் நான் கவிதை களத்தில் களம் இறக்குவேன்.

நன்றி தோழரே.

சுவரன் சொன்னது…

வணக்கம் கருப்பு தமிழா,,,

கவிதை களத்தில் தங்களின் கருத்துக்களை களம் இறக்கியதற்க்கு மிக்க நன்றி.
தங்களின் கருத்துரைகள் எனது கற்பனை விருட்சங்களின் விதைகள்.
தொடர்ந்து கருத்துரைகள் இடுங்கள்.