இரவுக்கு மதிப்பு...
விடியும் வரை.
விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை.
கணவுக்கு மதிப்பு...
களையும் வரை.
களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை.
மழைக்கு மதிப்பு...
மண்ணை சேறும் வரை.
மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை.
காதலுக்கு மதிப்பு...
மணவரை வரை.
மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை.
வயதுக்கு மதிப்பு...
ஐம்பதை தொடும் வரை.
காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை.
வாழ்க்கைக்கு மதிப்பு...
வாழ்வை இரசிக்கும் வரை.
வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை.
உடலுக்கு மதிப்பு...
உயிர் உள்ள வரை.
உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை.
தமிழனுக்கு மதிப்பு...
தமிழ் உள்ள வரை.
தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை.
புதன், 18 பிப்ரவரி, 2009
எது வரை மதிப்பு..?
இடுகையிட்டது சுவரன் நேரம் 2:01 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
அன்பு நண்பர் சுவரனுக்கு,
தங்களின் இக்கவிதையின் கடைசி வரிகளில் என்னை நீங்கள் நெகிழ வைத்துவிட்டீர்கள். தரமான தங்களின் கவிதைகளை மேலும் பலரும் படிக்கும் வண்ணம் இணையத்தில் பதித்ததற்கு, இணையத்தோழன் என்ற முறையில் எனது நன்றியும் பாரட்டுகளும். நன்றி. வணக்கம்.
Hi anna,your kavithai kalam blog is very nice and give message to all viewers. All the best to u and keep it up... Thank You.
Your Lovely Sis,
KALA
Hi anna,
தமிழனுக்கு மதிப்பு...
தமிழ் உள்ள வரை.
தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை
intha varigal ennai migavum kavarthullathu.VAZHATTUM TAMIL MOZHI, VAZHARATTUM KURAL NERI..
நன்றி,,,
சகோதரியே.
உமது பாராட்டுரைகள்...
எனது எதிர்காலத்தை காட்டும் வண்ண திரைகள்.
தொடர்ந்து கருத்துரைகள் இடுங்கள்
நன்றி.
அன்புள்ள கவிதை தோழர் சிந்தனையாளனுக்கு,,,
தங்களின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி.
தங்க்களின் கருத்துரைகள் என்னை மேலும் உற்சாக படுத்துகிறது தொழரே.
மெலும் கருத்துரைகள் இடுங்கள்.
நன்றி
சினேகத்துடன்,,,
சுவரன்
vanakam....
eathu varai mathipu eanum kavithai migavum sirapaaga irukirathu... anaitu tamil nenjanggalaiyum negizha vaikum intha kavithai... kavithaiyin kadaisi vari taai mozhiyai maranthu adaiyaalaminri vaazhum manithanuku oru netri adi... innum pala sirapaana kavithaigalai ealutha eanathu manamaarntha paaraaddukkal, nanba...
"unathurimai izhakaathe;
pirarurimai parikaathe..."
anbudan,
nilaa...
வணக்கம் நிலா தோழி,,,
தொடர்ந்து நீங்கள் கவிதை களத்தில் கால் பதித்துக் கொண்டிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.
தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன.
தொடர்ந்து கருத்துரைகள் இடுங்கள்
நன்றி.
கருத்துரையிடுக