CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

வியாழன், 26 பிப்ரவரி, 2009

வியக்க வைக்கும் இயற்கையே.


இயற்கையே...
வியக்க வைக்கும் இயற்கையே.
வெளுக்கச் சொல்லு உன் கிழக்கையே...
அந்தி சிவக்கயிலே அணைக்கச் சொல்லு வான் விளக்கையே.

இரவையும் தந்தாய்...
பகலையும் தந்தாய்...
இந்த உயிர்களுக்கு விருந்தாய்.
நேரம் தாழ்த்தாது இயங்குகிறாயே,,,
உன் கடமை தவறா கடிகாரத்தை நீ எங்கே வாங்கினாய்.

விண்ணிலிருந்து கண்ணடிக்கும் வெள்ளி பூக்கள்...
எண்ணி முடிக்க இயலாமல் தோற்றுப் போவது இன்னும் எத்தனை நாட்கள்..?

தென்றலின் இசைக்கு விருப்பம் போல அபிநயம் பிடிக்கும் விருட்சங்கள்.
பூப்பதும்...
பின்பு உதிர்வதும்.
காய்ப்பதும்...
பின்பு கணிவதும்...
இப்படி கணக்கில்லாத ஆச்சர்யங்கள்.

மண்ணை நனைக்கும் மழை துளி...
வானமும் பூமியும் உறவாடி கொல்லும் இந்த விசித்திரமான வழி.
மேக கூட்டத்தில் எவர் ஒலித்து வைத்தார் இவ்வளவு பெரிய வாலி..?
நடமாடும் பாறைகள் அங்கே நடப்பட்டனவோ,,,
மழையோடு சேர்ந்து பாறைகள் மோதும் பேரொளி.

எண்ணி வைத்தார் போல ஒன்பது கிரகங்கள்...
அவை வலம் வர அதி நவீன சாலைகள்.
பொறியியல் பட்டப் படிப்பு எங்கே நீ கற்றாய்..?
சொல்ல சொல்ல சளிக்கவில்லை இது போன்ற உனது சாதனைகள்.

இவைகளை எல்லாம் விடு...

மனிதன் என்ற மஹா படைப்பு...
இதை போல இல்லை ஒரு பிறப்பு.
சதைகள் கொண்ட இந்த விதைப்பு...
இதற்காகவே நடத்த வேண்டும் உன் திரமையை பாராட்டி ஒரு பட்டமளிப்பு.

இயர்க்கை இயவுளே,,,
இயக்குகிறாய் என் மண்ணை யே...
இயற்றுகிறாய் விண்ணை யே...
ஈடு இனையில்லா அன்னையே,,,
வணங்குகிறோம் உன்னையே.

புதன், 25 பிப்ரவரி, 2009

எது நிரந்தரம்..?

நிரந்தரம்...
எது நிரந்தரம்..?
நகர்ந்திடும் இந்த வாழ்க்கையில்...
எது நிரந்தரம்..?
சுழன்றிடும் இந்த பூமியில்...
எது நிரந்தரம்..?

பூமடி தாங்கும் அந்த பனித்துளி நிரந்தரம் தானோ..?
அதிகாலை ஆதவன் வந்து கையோடு கூட்டிக்கொண்டு போய்விடும் தானே..?

பூமிப்பந்தை நனைக்கும் பனித்துளிகள் நிரந்தரம் தானோ..?
மழையின் கருணை கொஞ்ச நேரம் தான்,,,
வந்த வேகத்திலேயே மறைந்திடும் தானே.

சொந்தம்...
பந்தம்...
எல்லாம் நிரந்தரம் தானோ..?
காசு பணம் வந்ததும் மனிதனின் கண்கள் உறவை மறந்திடும் தானே..?

மனிதனின் கதையில் இன்ப துன்பம் நிரந்தரம் தானோ..?
இன்பம் சில காலம்...
துன்பம் சில காலம்...
பருவ காலங்கள் போல மாறி மாறி நம்மை ஆட்டி வைப்பது இவ்விரண்டும் தானே..?

இந்த உடலில் உயிர் நிரந்தரம் தானோ..?
அந்த உயிரை இரவல் தந்த யுவனே அதற்க்கான காலாவிதியையும் வைத்தான்.
உயிர் உடலை விட்டு மீழும் போது,,,
உடல் வெரும் கூடு தானே..?

நிரந்தரம் இல்லா இந்த உலகத்திலே...
வரம் கேட்பது ஏன் தானோ..?
இருப்பதை வைத்துக்கொண்டு,,,
தரமானதாய் நம் வாழ்க்கயை வடிவமைத்துக் கொள்வது நம் கடமை தானே.

திங்கள், 23 பிப்ரவரி, 2009

நீயா...?


நீயா மலரிலே,,,
தேனை கறந்தது..?
மலரோ,,,
சட்டென விரிந்தது.

நீயா காற்றில்,,,
ஈர பதமாய் புகுந்தது..?
தென்றலும் அதில் குளித்து மகிழ்ந்தது.

நீயா நிலவில்,,,
ஏறி நின்று குடை பிடித்தது..?
அனுதினம் உன் தரிசனம் வேண்டி அது ஒற்றை காலில் நிற்கிறது.

நீயா குயிலுக்கு,,,
பாட கற்று கொடுத்தது..?
உனக்கு குரு வணக்கம் செலுத்தி விட்டு தான் அது பாட துவங்குகிறது.

நீயா கணவில்,,,
என்னை பார்த்து கண் அடித்தது..?
நனவிலும் அது வேண்டும் என்று கண்கள் அடம் பிடிக்கிறது.

நீயா உயிரிலே,,,
கலகம் புரிந்தது..?
என் உயிரோ,,,
என்னை விட்டு விட்டு உன் உயிரோடு வந்து கலந்தது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழ் ஈழத்தின் ஓலம்





(நான் சுமந்த அதே தமிழ் இரத்தம் சிதைந்த அந்த பூமிக்கு இந்த கவிதை அஞ்சலி ஒரு சமர்ப்பணம்)

இங்கே பூக்கள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன...
மண் தரையில் உதிரங்கள் படிந்திருக்கின்றன.
இவை உதிர்ந்த பூக்கள் அல்ல...
உதிர்த்தப்பட்டப் பூக்கள்.
போர்க்களங்களால் தகர்க்கப்பட்ட பூக்களங்கள்.

தலையெழுத்தை எழுதத் தெரியாத பேதைகள் மீது அணுகுண்டு.
கால் வயிற்று கஞ்சிக்கே வழியில்லாத ஏழைகள் நெஞ்சில் துப்பாக்கி குண்டு.

கறுவறை ஈரம் கூட இன்னும் காயவில்லை...
குண்டுகளுக்கு இரையாகி மழழை பிணம்.
எங்கே தான் போகும் இந்த பாவப் பட்ட ஜனம்..?
இனம் அழிந்தும் இன்னும் போகவில்லை இரத்த மணம்.

மாதர்கள் கண்களில் கண்ணீர் இல்லை...
இரத்தம் கசிகிறது.
இத்தனை பிணங்களை குவித்தப் பின்னரும்,,,
படை தலைவனுக்கு இன்னும் பசிக்கிறது.

வேட்டையாட வந்தவனின் காமப் பசிக்கு அடிமை பெண்களின் நிலவரம்,,,
கொடுமையான கொடூரம்.
இது வீரர்களின் வீர சாகசம்.
காக்க வேண்டியவனே கடித்து குதறுவது என்ன நியாயம்..?
உங்களுக்கும் நாய்களுக்கும் என்னடா வித்தியாசம்..?

வட்ட மேஜைகள் இருக்கு...
குளு குளு குளிர்சாதனம் இருக்கு...
கண்ணாடி கோப்பையில் தண்ணீர் இருக்கு...
இத்தனையும் எதற்கு..?
தலைவர்களுக்கிடயே கைக்குலுக்கு.

வெட்டியாக மானாடு...
முதலில் அந்த பிஞ்சு பிணங்களை புதைக்க ஒரு வெட்டியானை தேடு.

முடிவுக்கு வராத அமைதி ஒப்பந்தம்...
அகதிகளின் அவலை உடல்களை எறிக்க யார் பிடிக்கப் போகிறார்கள் தீ பந்தம்..?

அணுகுண்டுகளுக்கு பலியாகும் அணுக்களுக்கு,,,
தூரத்திலிருந்து அனுதாபம் மட்டும் போதுமா..?
மக்கள் செத்துப் பிழைக்கும் இந்த மண்ணுக்கு பெயர் தான் சுதந்திரமா..?

உரிமை கொண்டாடுவதர்க்கு போர் தான் வழியா..?
தலைவனின் வீர விளையாட்டுக்கு அப்பாவி மக்கள் பலியா..?

ஹேய் தலைவா...
அந்த இறைவன் தருவான் ஒரு நாள்,,,உன் கொடுமைக்கு நிகரான கூலியா.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

கண்ணீர் மடல்




இதய வாணி,
காதல் கறுவரை,
குடல் சந்து,
உயிர் முற்றம்.
காதல் தேசம்.

அன்புள்ள காதலி,

வாசகன் புனைந்தது...
இதயத் துடிப்பில் விளைந்தது...
கன்கள் அழுத போது கண்ணீரால் பதிந்தது.

நான் பேசவில்லை,,,
என் இதயம் பேசுகிறது.

வார்த்தை இருந்திருந்தால் வாய்மொழியில் சொல்லியிருப்பேன்...
கண்ணீர் தான் வருதே,,,
அதான் கடிதம் போட்டேன்.

எழுதிய நோக்கம் சொல்ல நாவுக்கு நாதியில்லை...
சொல்லாமல் விட்டு விட்டால்,,,
என் நோவுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

நெருங்கி வந்த நெஞ்சமே...
என் நெஞ்சை மறந்து போக காரணம் என்னடி..?
என் இதயம் நெய்த பூங்கொடி...
உனக்கு இதயம் இருக்கா சொல்லடி.

என் இதயத்தை வாடகைக்கா வைத்திருந்தேன் வாச மல்லிப் பூவே..?
வந்த வேகத்திலேயே பிரிவது தான் உன் வழக்கமோ.
இது தான் பெண்மையின் பழக்கமோ..?
இதை அறிந்த பின்னும் என் இருதயம் தான் துடிக்குமோ..?

காதலை கண்களில் புதைத்து விட்டு...
காலியான நெஞ்சை விதைத்து விட்டு...
காற்று வாங்க வந்தேன் என்றால் கண்கள் தூங்குமா.
பெண்ணே நீ செய்வது தான் நியாயமா.
இறகில்லாமல் பறந்த இளமனசை,,,
இரக்கமின்றி அறுத்து போட்டவளே...
சொல்லு...
உன் மனதை தொட்டுச் சொல்லு...
என்னை மறக்க முடியுமா..?

மோசம் செய்த உன் மேல் ஒரு போதும் நேசம் குறைந்ததில்லை.
கண்ணீர் தந்தாலும்...
கண்மணி,,,
என் காதலுக்கு நீ பகையில்லை.

ஒன்று மட்டும் நீ தெரிந்துகொள் காதலியே,,,

இது வெட்டிக்கு எழுதிய வாசகம் அல்ல கண்ணே...
மரண சாசனம்.

இந்த கடிதம் உன்னை சேரும் முன்னே,,,
என் மறைவை சொல்ல ஓலை வரும்.
வாய்க்கரிசி போட வசதியிருந்தால்...
வந்து விட்டு போ.

இப்படிக்கு,,,
கல்லறைக்கு காத்திருக்கும் உன் கடந்த கால காதலன்.

நிலாவின் நினைவு துளிகள்


பிரிவோம் சந்திப்போம்...

"பிரிவு"
உயிர் பிரியும் நேரத்தை விட...உறவுகள் பிரியும் நேரமே கொடுமையடி.
என்று எங்கோ படித்த ஞாபகம்...
அது முற்றிலும் உண்மை என்பதை நான் நம் கல்லூரி நட்புகளை பிரிந்த நேரம் அறிந்தேன்.

கல்லூரி நன்பர்களின் செல்ல சீண்டல்களையும்,,,
சின்ன சின்ன சண்டைகளையும்,,,
அன்பான வார்த்தைகளையும்,,,
மனதில் பதித்து...
நமது அடுத்த சந்திப்பிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

அதுவரை நமது பறிமாற்றங்களின் அடைக்கலம் இந்த கவிதை களம்.

நினைவுகளுடன்,,,
நிலா.

கோகியின் கைவண்ணம்

நட்பு எனும் புத்தகம் திறந்தேன் படிப்பதர்க்கு...
ஆனால் அங்கு அன்பு எனும் சொற்கள் மட்டுமே தெரிந்தன ...
என் கண்களுக்கு.

அன்புடன்,,,
கோகி

புதன், 18 பிப்ரவரி, 2009

எது வரை மதிப்பு..?

இரவுக்கு மதிப்பு...
விடியும் வரை.
விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை.

கணவுக்கு மதிப்பு...
களையும் வரை.
களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை.

மழைக்கு மதிப்பு...
மண்ணை சேறும் வரை.
மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை.

காதலுக்கு மதிப்பு...
மணவரை வரை.
மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை.


வயதுக்கு மதிப்பு...
ஐம்பதை தொடும் வரை.
காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை.

வாழ்க்கைக்கு மதிப்பு...
வாழ்வை இரசிக்கும் வரை.
வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை.

உடலுக்கு மதிப்பு...
உயிர் உள்ள வரை.
உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை.

தமிழனுக்கு மதிப்பு...
தமிழ் உள்ள வரை.
தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

காதலோடு ஒரு நாள்


(காதலர் தினத்தன்று என் கற்பனைகளை விட்டு எகிரி குதித்த வரிகள்)

காதலோடு ஒரு நாள்...
காத்திருந்த திருநாள்.
காதலனும்...
காதலியும்...
காதலோடு முலுமையாய் கை கோர்க்கும் பெருநாள்.

நகரும் ஒவ்வொரு நொடியும் இன்பமான கதை...
சிதரும் ஒவ்வொரு வார்த்தைகளும் அழகிய ஹைக்கூ கவிதை.
எங்கு பாரினும் பூக்களின் சந்தை...
இன்று புரியும் ரோஜா பூக்களின் விந்தை.

கல்லறை காதல் உயிர் பெற்று எழுந்து வரும்...
மறந்த காதல் மனதை தொட்டுச் செல்ல திரும்ப வரும்...
மாடியில் மலர்ந்த காதல்,,,
காதல் மடியை தேடி வரும்...
குடிசை காதலும் அந்த வரிசயில் இடம் பெரும்.
மண்ணுக்கு இறங்கி வந்து இந்த அதிசயங்களை பார்த்தாள்,,,
கடவுளுக்கும் காதல் வரும்.

பூங்காக்கள் இன்று சொர்க்கமாய்...
அலை தொடும் மனல் தரைகள் வசதியான ஆசனமாய்.
எந்த நேரமும் இன்று சுப முகூர்த்தமாய்...
இந்த நாள் நம் வாழ்க்கயில் மறக்க முடியாத சரித்திரமாய்.

கடவுள் மட்டும் பூமிக்கு இறங்கி வந்தால்,,,
காதல் வயப் பட்டு இங்க்கேயே தங்கி விடுவான் ஓர் ஓரமாய்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

கடவுள் குழந்தைகள்


புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்...
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்...
தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்...
சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...
எதிரியா நாங்கள்..?

பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்...
உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்...
நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்...
தாருங்கள்...
தாருங்கள்...
முகவரி தாருங்கள்.

அப்பா யாரு தெரியவில்லை...
அம்மா பெயரும் அறியவில்லை...
எங்கள் வேதனை யாருக்குமே புரிவதில்லை.
என் தாய்க்கு ஏனோ என்னை பிடிக்கவில்லை..?
கண்ணீர் விட்டு அழுகுது இந்த பிஞ்சு முள்ளை.

பெற்றேடுத்தால் போதுமா..?
பெற்ற கடன் தீறுமா..?
என்னை பெற்ற தாயவள்...
எங்கே நீ சொல்லம்மா.
காத்திருந்தும் பயனில்லை,,,
நான் செஞ்ச பாவமா.

தாய் பால் ருசித்ததில்லை...
உணர்ச்சிகள் இல்லா கொடியவனா..?
தந்தை முகம் கண்டதில்லை...
கண்கள் இருந்தும் குருடனா..?

சுற்றம் சொன்ன அனாதை பட்டம்...
அதுவே எனக்கு பெயராச்சு.
அலையாடினேன்...
ஆதாரம் தெடினேன்...
எமாற்றமே எனக்கு வரமாச்சு.

என்னை பெத்த மகராசி...
எனக்கும் இல்லை முகராசி.
அன்பை அனுபவிக்காத ஆதிவாசி...
இந்த சமுதாயத்தை பொருத்தவரை நான் வெறும் தூசி.

இரு மனங்கள் சேறும் திருமணம்


(கல்லூரி தொழியின் திருமண விருந்துபசரிப்பின் போது வாசிக்கப் பட்ட கவிதை)

ஓரிரு வாரங்களுக்கு முன்பு...
அந்த பிரம்ம தேவனிடமிருந்து ஓர் அழைப்பிதழ் தூது விட பட்டது.
விரும்பிப் படித்தேன் அது திருமண அழைப்பிதழ் என்று தெரிந்தது.

தேவலோகத்தில் திருமணமாம்...
சூரிய மண்டலத்து இளவரசனையும்...
சந்திரத் தேசத்து ராஜ குமாரியையும்...
இணைக்கும் வன்னம் இப்படி ஒரு உடன் படிக்கையாம்.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,,,
இந்த திருமணம் வின்னிலாம்...
விருந்துபசரிப்பு மண்ணிலாம்...

வின்வெளி என்பது வெகு தூரம் என்பதால்,,,
அங்கே எனது வருகயை பதிவு செய்ய இயலவில்லை.
அதனால் தான் இங்கு பதிவாகிவிட்டேன்.

எங்கோ பிறந்த ஒரு பூமகள்...
எங்கோ பிறந்த ஒரு திருமகன்...
இந்த இரண்டு இதயங்களையும் இணை பிரியாது சேர்த்து வைத்தான் இறைவன்.
திருமணம் என்ற பெயரில் அழகிய இரு மனங்களை கோர்த்து வைத்தான் இறைவன்.

தலைவனுக்குத் தலைவி இவள் தான்...
தலைவிக்குத் தலைவன் இவன் தான்...
என்று இறைவன் எழுதி வைத்தான்.
அவன் ஒரு கைத்தேர்ந்த நிபுனன் என்பதற்க்கு சான்று இந்த அழகிய மணமக்கள் தான்.

இவள் பெயருக்கு பின்னே அவன் பெயரும் சேர...
இப்படி ஒரு ஜோடியா என்று ஊரே நயந்து கூர...
இன்பங்கள் வந்து வாழ்க்கையில் தூர...
அந்த பிரம்மனும் ஆசைப்படுவான் உங்கள் குடும்பத்தில் இணை சேர.

இவன் இரவுக்கு அவள் நிலவாக...
அந்த நிலவுக்கு அவன் ஒளியாக.

அவன் தோட்டத்தில் அவள் மலராக...
அந்த மலருக்கு அவன் மணமாக.

ஒருவருக்கு ஒருவர் துணையாக...
வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மகிழ்வாக.

ஜோடிப் புறாக்கள் நடந்து வருகயிலே,,,
நிமிர்ந்துப் பார்க்கும் நீல வானம்.
ஓவ்வொரு அடிக்கும்,,,
ஓராயிரம் மலர்களை தூவும்,,,
குறிஞ்சிப் பூசெடிகள்.

வானம் முழங்கிட...
மேகம் மேளம் கொட்ட...
தேரில் உலா வரும் மணமக்கள்...
வானவில் குனிந்து சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

அமைதியை எங்கே தேடுவது..?


அமைதி
ஆண்டவனின் சன்னிதி.
ஆள் இல்லாத அண்டங்களின் ஆரம்ப கால அவதி.

அமைதி...
கல்லரையின் விதி.
அதுவே நம் வாழ்க்கையின் காலாவதி.

அமைதி,,,
சிலருக்கு அது இனிமை...
அறுசுவை படைக்கும் கவிஞனுக்கு அங்கு தான் எழும் கற்பனை.

அமைதி,,,
சிலருக்கு அது கட்டாய கடமை.
கணவனை இழந்த பெண்ணுக்கு கொடுக்கப் பட்ட தண்டனை.

அமைதி,,,
சிலருக்கு அது சோதனை...
சிறை கைதிகளுக்கு கிடைத்த போதனை.

ஆமைதி,,,
சிலருக்கு அது கொடுமை...
காது கேளாதவர்களுக்கு பெறும் வேதனை.

இரவுக்கு அமைதி...பனித்திரை.

மனசுக்கு அமைதி...மாசு இல்லாத யாத்திரை.

மனிதனுக்கு அமைதி...நல்ல நித்திரை.
சில சமயங்களில் மாத்திரை.

இன்றோ,,,
அமைதி கூட ஆரவாரமாகவே இருக்கிறது...
கடல் அலைகள் கூட கரையை வந்து சேறும் போது கூச்ச்ல் போட்டுக் கொண்டு தான் வருகிறது.
அந்த,,,
அமைதியை எங்கே தேடுவது..?
அதை இங்கே தேடுவதர்க்குள்ளேயே அமைதி எங்கோ ஓடி விடுகிறது.

புதன், 11 பிப்ரவரி, 2009

தமிழா நீ வீரனடா...


வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வீர தமிழா.
பூகம்பத்தை கடந்திடலாம்...
பூ கம்பத்தில் ஏறி நின்று புது புரட்சி செய்யலாம்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் வெற்றி தமிழா.
ஆழ் கடலில் இன்னும் ஏன் தத்தளிப்பு..?
அலைகளை கடந்து வா,,,
கரையில் உனக்கு பரிசளிப்பு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் சாதனை தமிழா.
சிகரத்தை கண்டு பயம் எதற்கு..?
உச்சியில் நின்று பார் சிறகுகள் முளைக்கும் உனக்கு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் புரட்சி தமிழா.
குற்றம் சொல்லும் சுற்றம் ஓயாது...
சுற்றங்களை விட்டு விடு,,,
மாற்றங்கள் செய்து விடு.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தங்கத் தமிழா.
வெறும் கையால் முழம் போட்டது போதும்...
கரங்களை தட்டு மலைகளும் நகரும்.

வீறு கொண்டு எழுந்து வா,,,
என் தாய் தமிழை பருகிய தமிழா.
உன் பெயரை உரைக்காத இதழ்களா..?
உனக்காக நடத்தும் இந்த உலகம் ஒரு வெற்றி விழா.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சுனாமி


(சுனாமியின் சீற்றத்தால் என் கண்கள் அழுத போது விளைந்த கண்ணீர் ஊற்றுகள்)

ஹேய் நிலமே...
ஹேய் நிலமே...
உனக்கும் கூட எங்கள் மேல் இரக்கம் இல்லையா.
நாங்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.
எங்களுக்கெல்லாம் இந்த பூமியில் வாழ இடம் இல்லையா..?

எத்தனை கனவுகள்...
எத்தனை ஆவல்கள்...
எத்தனை ஆசைகள்...
எல்லாம் உன் மடியிலே கலைந்தது பார்த்தாயா...
அதுவும் உன் தயவாலே சிதைந்தது பார்த்தாயா...

பூமி தேவதையே...
உன்னை நம்பி எத்தனை உயிர்கள்.
கண்கள் களைப்பாரும் வேலையிளே,,,
கண்கள் விழிக்காதபடி செய்து விட்டாயே.

பத்து மாதங்கள் சுமந்த தாயை விட நீ உயர்ந்தவள் அல்லவோ...
உன் பிள்ளைகளை நீயே விழுங்கியது சரியாமோ.
பொறுமை காக்கும் புண்ணியவதியே,,,
இது தான் தாய்மையின் குணமோ.

பச்சை மழலைகள் பட்டினியிலே...
பால் கொடுத்த தாய் உன் வயிற்றுக்குள்ளே.
பிள்ளைகளை இழந்த தாய் கண்ணீரிலே...
மண்னை அரியாத மழலைகள் மண்ணுக்குள்ளே.
உலகே சவக்கிடங்காகி கிடக்குதே...
நீ விழுங்கி துப்பிய அரைகுறைஉடல்களில் இரத்தம் இன்னும் காயலே.
உடமை இழந்த நடைகளின் விதி வீதியிலே...

உயிரை வாங்குவதல்லவோ உன் பணி
உயிரை வார்பதுதனோ
கடமை தவரிய காட்டேரியே
சொக்கனின் பணி உனகெதற்கு

பாவி மகளே,
யாருக்கு நீ வைத்த குளியோ...
அம்பை ஏய்து விட்டாய்....
அண்டங்களை சிதைத்து விட்டாய்....
நிலங்களை பிளந்துவிட்டாய்....

ஒரு நொடி கோபத்துக்கு
ஓராயிரம் கோரங்கள்....
ஒரு நாள் கூத்துக்கு....
குவிந்திருக்கும் பிணங்கள்....


கட்டிட இடுபடுகளுக்கிடையே.....
உயிர் இருந்தும் பிணமாக...
அளுகுறல் கேட்கலையோ....
காப்பாற்ற யாராவது வருவார் என்று ஆவலுடன்.....

நாங்கள் செய்தால் கொலை- அதை
நீ செய்தால் இயற்கை தவறா?

ஆதாரம் சொல்லலாம்.....
அது இயற்கையின் சீற்றம் என்று....
எந்த நீதி கூண்டிலும் நின்று சொல்வேன்-
இது நீ செய்த குற்றம் என்று.....

திங்கள், 9 பிப்ரவரி, 2009

நட்பு


அதிசயமானே உலகம் இது...
ஆனந்தம் குவிகிறது.
ஆணும் பெண்ணும் ஆறோக்கியமாய் அன்பு கொல்லும் உறவு இது.

உலகம் என்பது அழிந்து போகலாம்...
உயிர்கள் யாவும் மடிந்து போகலாம்...
நட்பு கொண்ட உள்ளங்கள் மட்டும் மறுமையிலும் புனித உறவு கொள்ளலாம்.

பயணம் என்பது முடிவை காணுமே...
வாழ்க்கை என்பது நிறைவை காணுமே...
நாளைய உலகம் முற்று பெறுமே...
நட்பு கொண்ட உயிர்கள் மட்டும் கொஞ்சம் மனது வைத்தால்,,,
உயிர்கள் இன்னும் கொஞ்ச நாள் மண்ணில் வாழுமே.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

உண்மை அறிந்தேன்

மின்னலில் ஏரி வந்தவன்...
உன் பின்னலில் மாட்டி கொண்டேன்.
முன்னாளில் நான் கண்ட கணவு எல்லாம்...
பின்னாளில் நனவாக கண்டேன்.

சொந்த பாதையில் நடந்து வந்தவன்
பாதை மறந்து விட்டேன்.தொலைத்த பாதை தேடி தேடி...
நீ கடந்த பாதையில் பயணம் தொடர்ந்தேன்.
வானமே போதும் என்று வாழ்ந்தவன்...
நிலவை துணைக்கு கேட்கிறேன்.

பகலில் கூட அவள் உதயமாக வேண்டும் என்று வரம் கேற்கின்றேன்.
கவிதை பேசி வந்தவன்...
உன் முன்னாலே பேச திணறுகிறேன்.
அவஸ்தை என்பதை என் ஆயுள் வரமாய் ஏற்று கொண்டேன்.

சொந்த பந்தம் கூடி வந்தவன்...
அகதியாக நிற்கின்றேன்.
உறவு என்று உன் பெயரை ஊருக்கே சொல்கின்றேன்.

கண்களை மூடி கொண்டவன்...
காதலே வேண்டாம் என்று இருந்தேன்.
கண்கள் திறந்து பார்த்தேன்...
கண்கள் மூட மறுக்கின்றேன்.
வயதை பூட்டி வைத்தவன்...
மனதை பூட்டி வைக்க மறந்தேன்.
மனது உன்னை காட்டி கொடுக்க,,,
உன்னில் நான் பூட்டி கொண்டேன்.
நிலவின் வருகை அறிந்து கொண்டவன்...
உன் வருகை உணராதிருந்தேன்.
உயிரில் புகுந்து நீ உறவாடிய போது தான் அதன் உண்மை அறிந்தேன்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

அறுசுவை அகராதி

அட்சரங்க்களை தொடுக்க பேனா தேவையில்லை எனக்கு...
உன் விரல்கள் போதும் எனக்கு.
உன்னை எண்ணி பார்த்தாளே,,,
எல்லை இல்லை என் எண்ணங்களுக்கு.


எதுகை மோனை எதற்க்கு எனக்கு..?எதுகைக்கு ஏதுவாய் உன் எழில் இருக்கு.மோனைக்கு துணையாய் உன் இதழ் இருக்கு.

என் அகரத்தை ஆக்ரமித்த ஆகாரமே...
ஒரு அறுசுவை அகராதி தான் நீ எனக்கு.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பிரிவோம் சந்திப்போம்



மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டோம்...
அந்த கல்லூரி எனும் மலர் சோலையில் தஞ்சம் கொண்டோம்.
பாடம் மட்டும் நாங்கள் அங்கே கற்றுக் கொள்ள வில்லை...
நல்ல பாடமும் சேர்த்து கற்று கொண்டோம்.
ஏட்டுக் கல்வியை மட்டும் பெற்றுக் கொள்ள வில்லை...
வாழ்க்கை கல்வியையும் பெற்று கொண்டோம்.

கல்லூரி களமே...
அன்றும் இன்றும் என்றும்,,,
நீ தான் எங்களுக்கு எல்லாமே.
உன் மடியில் தவழ்ந்த ஒவ்வொரு நாழிகையும் நெஞ்சில் இனிக்குமே.க
ல்லூரி தளமே...
உன்னை நினைக்குக் போதெல்லாம் உள்ளத்தில் கண்ணீர் ஊறுமே.
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியும் உன்னையே சாருமே.

கனமான நட்பின் பரிமாற்றம்...
உயிரான காதலின் உருவாக்கம்...
நினைத்து பார்த்தால் கண்ணீர் சுரக்கும்.

சின்ன வண்ண குறும்புகள்...
செல்லம் கொஞ்சும் சண்டைகள்...
வேறு எங்கு விளையும் இந்த விந்தைகள்..?
இவை அனைத்தயும் வரமாய் தந்தது இந்த கல்லூரி நாட்கள்.

நாம் நடந்த இந்த கல்லூரி தரைகளிள் படிந்திருப்பது...
நம் கனவுகளை சுமந்த காலடி சுவடுகள்.
உயர்ந்திருக்கும் காம்பௌண்ட் சுவர்கள் பதிவு செய்து உரைக்கும்,,,
நாம் பேசிய வார்த்தைகள்.
நூல்களை தவிர நாம் நேர்மையாய் வாசித்தது நன்பர்களின் இதயங்கள்.

எங்கிருந்தோ வந்தோம்...
அறிமுகம் இல்லா முகவரிகளோடு.
ஒன்றாய் இனைந்தொம் இதயத்தின் சுகவரிகளோடு.
இன்று பிரிந்தும் பிரியாதிருக்கிறோம் மறக்க மறுக்கும் நினைவுகளோடு.

கண்கள் நனைகின்றது...
மீண்டும் அந்த வாழ்க்கை வெண்டும் என்று நெஞ்சம் கேட்கின்றது.
ஒரு வேளை நாம் மறந்தால் கூட,,,
நினைக்கச் சொல்லி நினைவுகள் நம்மை அடிக்கின்றது.
அந்த அற்புத நாட்களை எண்ணி எண்ணியே நம் இதயமும் இயல்பாய் துடிக்கின்றது.

பிரிவோம் சந்திப்போம்...
நம் பிரிவை நாம் சந்திப்பதற்க்காக அல்ல.
நாம் பிரிவதே மீண்டும் சந்திப்பதற்க்காக.
பிரிவே இல்லாத வாழ்க்கையை நம் கல்லூரி நினைவுகள் தரும் நிச்சயமாக.

புதன், 4 பிப்ரவரி, 2009

அழகை அறுவடை செய்தவன்


அழகான சிற்பத்தை செதுக்கியவன் சிற்பி என்றால்...
அழகான உன்னை செதுக்கிய ஆண்டவனும் ஒரு சிற்பி தான்.

கற்பனைகளை குடைந்தெடுத்து அட்சரமாய் தொகுப்பவன் கவிஞன் என்றால்...
தன் கற்பனைகள் முழுதயும் உனக்கென முற்றாக செலவழித்த கர்த்தன் ஒரு மஹா கவிஞன் தான்.

வியக்க வைக்கும் ஒரு காட்சியை வெறும் தூரிகை கொண்டு துவட்டி எடுப்பவன் சிரந்த ஓவியன் என்றால்...
வெறும் வானவில் வன்னமே கொண்டு இந்த உலகமே வியக்கும் வகையில் உன்னை வரைந்த அந்த இறைவனும் ஒரு கை தேர்ந்த ஓவியன் தான்.

எதையும் எதிர்க்க துனிந்தவன் வல்லவன் என்றால்...
பிரம்மோவியமே உன்னை இவ்வளவு பிரம்மாண்டமாய் படைக்க துனிந்து வெற்றி பெற்ற அந்த பிரம்மன் உண்மையில் சகலகலா வல்லவன் தான்.

அழகெனவே பிறந்தாளே...


அழகெனவெ பிறந்தாளே...
அழகை தன்னுல்லே தத்தெடுத்தாளே...
அக்கினி சூரியனை அலங்கரித்தவளே...
ஆக்கரையில் இருந்து இக்கரையை இயக்குகிராய்,,,என் இனியவளே.

சுந்தர பெண்னவளே...
செந்தூர கலைமகளே...
சந்திரனை சுருட்டி போடும் வித்தைகள் கற்றவளே...
சொந்தமாக ஒரு வானம் செய்து அங்கே வாழ்கிறாய்,,,
என் இயற்கையின் மகளே.

என் சிந்தை தரித்தவளே...
என் சிந்தனை கருவை கலைத்தவளே...
சிந்து நதி கரையில் தவழ்ந்தவளே...
சிந்திக்கும் போதெல்லாம் நீ மட்தும் தான் முந்தி கொள்கிறாய்,,,
என் சிங்கார மான் விழியே.

உறுகுதே வானவில்...
உன் தலை மேலே.
பெருகுதே வண்ணங்கள்...உன் உடல் மேலே.
பூமியும் அழகானது உன்னாலே.
அண்டங்கள் ஆளும் அழகியே...
எப்போது என்னை ஆள போகிறாய்,,,சொல்லடி என்னவளே.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

சொர்கம் எப்படி இருக்கும்..?

பூக்களால் நெய்த புல் தரைகளாய் படிந்திருக்குமா..?

தேவர்களும் தேவதைகளும் உலா வரும் உல்லாச தலங்கலாக இருக்குமா..?

குலிர் சாதன வசதிகள் கொண்ட விடுதிகள் நிறைந்திருக்குமா..?

வித விதமானே வினோத உணவுகள் அங்கே செய்து தர படுமா..?

போக்குவரத்து நெரிசலே இல்லாத சாலைகள் தென் படுமா..?

போர் தயக்கமே இல்லாதே வழக்கங்கள் அங்கே அனுசரிக்க படுமா..?

தமிழ் மொழி அங்கே உலக மொழியாய் போற்ற படுமா..?


பணம் என்ற பேய்கள் இல்லாத புது பொருளாதாரம் அங்கே கடை பிடிக்கப்படுமா..?


அடிமை என்ற சொல்லே அங்கே வலக்கிலிருந்து அகற்ற படுமா..?

ஜாதி மதம் என்ற கொடிய பேதங்க்கலே இல்லாத வேதங்களின் ஆதிக்கம் கொண்டாட படுமா..?


அரசியல் சாக்கடைகள் தூர்வாரப் பட்ட தொகுதிகலாக தகுதி பெறுமா..?

சொர்கம்.இப்படி இருக்குமா..?
இல்லை,,,அப்படி இருக்குமா..?
நேரில் பார்த்தவர்களை நாம் தான் நேரில் பார்க்க முடியுமா..?
சொர்கம் எங்கே என்று தேடுவதை விடு,,,
நீ எதிர் பார்க்கும் சொர்கத்தை உருவாக்க உடன் படு.
உலகத்தை விட ஒரு சொர்கம் வருமா..?