நீல வான மேகங்களே...
எனது நிலைமை அறிந்து சொல்லுங்கள்.
காற்றோடு காத்தாட காலங்காத்தாலயே சென்றது,,,
இன்னும் வரவில்லை.
குளிர் ஆடை போர்த்திய ஓடைகள்...
என் கணவை கண்டு பிடித்து சொல்லுங்கள்.
உறக்கத்துக்கு வாக்கப்பட்டு அது போனது,,,
எந்த தகவலும் இல்லை.
கண்கள் எல்லாம் மயங்கி போகும் அளவுக்கு கண்டாங்கி சேலை கட்டி நடந்துப் போகும் அந்தி சூரியனே...
எனது தற்போதைய நிலவரத்தை அறிந்து சொல்லுங்கள்.
அந்தி சாயும் நேரத்தில் நொந்து எங்கோ போனது,,,
ரொம்ப நாளாய் அங்கிருந்து மடல் கூட வரவில்லை.
இயற்கைகளே...
உங்களோடு நான் சமாதியாகி விட்டேன்.
எனக்கும் என் கவிதைகளுக்கும் நண்பர்கள் நீங்கள் தான்,,,
மனிதர்கள் இல்லை.
செவ்வாய், 31 மார்ச், 2009
இயற்கையே எனது இருக்கை.
இடுகையிட்டது சுவரன் நேரம் 2:35 PM 0 கருத்துகள்
நட்பின் நெறி
நட்பு ஒரு நல்ல கவிதை...
பேனா முனையில் அது உறங்கிக் கொண்டிருக்கும் வரை.
அட்சரமாய் வந்து விழுந்து விட்டால்,,,
அது குருடன் கையில் கிடைத்த நிலை.
நட்பு ஒரு வீணை...
எந்த கரங்களாவது மீட்டி கொண்டிருக்கும் வரை.
மீட்ட யாரும் இல்லாத வேளையில்,,,
அதன் இருப்பிடம் வீட்டில் ஒரு மூலை.
நட்பு ஒரு பரவச பூக்களின் தோட்டம்...
அது வாடாத வசந்த நாள் வரை.
வாசம் அங்கே குறைந்து விட்டால்,,,
நட்புக்கும் நாளை இங்கில்லை.
நட்பு என் உயிர் நாடி...
நட்பு என் சுவாசம்...
இதன் உண்மை எல்லாம் அதை உறைப்பவனின் வாய் பேச்சு வரை.
இதயத்தை திறந்து பார்த்தால் எச்சில் கறை.
இடுகையிட்டது சுவரன் நேரம் 2:23 PM 5 கருத்துகள்
திங்கள், 23 மார்ச், 2009
அன்பே நீ எனக்கு,,,
அன்பே நீ எனக்கு,,,
மூங்கிலில் நுழைந்த சுக ராகங்கள் போல...
கோடையில் விழுந்த மழை துளி போல...
இருட்டுக்கு ஒலி வீசும் நிலவு போலே...
வெய்யிலுக்கு விரிந்த விருட்சம் போல...
தாகத்துக்கு தட்டுப் பட்ட தெப்பக் குளம் போல...
கண்ணீருக்கு வாக்கப் பட்ட கைக்குட்டை போல...
உழைப்பாளிக்கு ஒதுக்கப் பட்ட ஒரு நொடி உறக்கம் போல...
தத்தளிப்பவனுக்கு தென் பட்ட மிதவை போல...
பிச்சைக்காரன் தட்டில் விழுந்த சிவப்பு நோட்டு போல...
என் உடலுக்குள் ஊடுருவும் உயிர் போல...
இல்லை ஒரு ஜீவன்,,,
அன்பே...
உன்னைப் போல.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:58 PM 2 கருத்துகள்
அகிம்சை அடுப்பு...
அகிம்சை அடுப்பு...
அதில் அமைதி எனும் நெருப்பு.
சத்தமில்லாமல் உலையில் வேகட்டும் பருப்பு.
மனிதா அறிந்து கொள் உனது பிறப்பு...
மனிதனாய் பிறந்து விட்டாளோ,,,
மற்ற உயிர்கள் எல்லாம் சாதா என்ற நினைப்பு.
கடல் அலையின் சத்தத்தில் கூடே இன்னும் சுனாமியின் மரண ஓலம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது...
கிராமத்து மண்ணில் கூட இன்னும் சாதி மதச் சண்டையால் சிந்திய இரத்த வாடைகள் இன்னும் என்னை மூச்சடைக்க செய்கிறது.
பூக்களை கூட அமைதியாக பூப்பதை விரும்பும் நமக்கு...
சிற்றுயிர்களை துடிக்க துடிக்க பலி கொடுக்கும் ஆர்வம் எதற்கு..?
கணவன் அடித்தால் ஏற்றுக் கொல்லும் மனப் பக்குவம் மனைவிக்கு...
ஒரு சிறு எறும்பு கடித்தாலோ ஏனோ அதன் மீது கொலை வழக்கு.
உயிர்கள் என்பது பெரிதேனும்...
அதுவே சிரிதேனும்...
உயிர் என்பது சமம் தானே.
உயிர்களை மதிப்பொம்...
வன்முறை வெண்டாம் என்ற சட்டம் விதிப்போம்...
பூக்களும் ஜனநாயகம் பேசுவதற்க்கு அனுமதி அழிப்போம்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:55 PM 0 கருத்துகள்
புதன், 18 மார்ச், 2009
புதிய பழமொழி
ஆக்கப்படுவதும் ஆணாலே.
அழிக்கப்படுவது ஆணாலே
கனிவுடன்,,,
தோழி கலைவாணி
இடுகையிட்டது சுவரன் நேரம் 9:28 PM 0 கருத்துகள்
இரயிலில் ஒரு மயில்...
விரைவு இரயிலில் விரைவாக ஏறி அமர்ந்தேன்...
துணி பையை இரும்பு தூணோடு அமர்த்தி விட்டு சாய்ந்தேன்.
குழந்தையின் அழுகை சத்தம் ஒரு புரம்...
இரயில் நகரும் சத்தம் மறு புரம்...
கலைப்பின் கருணையால் அந்த சத்தத்திலும் கண் அசந்து விட்டேன்.
தூக்கம் கலைந்து எழுந்து சற்று நிமிர்ந்தேன்...
ஒரு தாமரை தோட்டமே என் முன் அமர்ந்திருந்ததாய் உணர்ந்தேன்.
ஸ்தம்பித்துப் போனது என் இதய ஆலை.
தப்பிக்க முயன்றது கண்கள் அந்த வேளை...
பெண்களில் எந்த வகை பெண் அவளோ..?
பூவின் கருவில் பிறந்திருப்பாளோ..?
வானவில் பரம்பரையிலிருந்து வந்திருப்பாலோ..?
பிரம்மனும் கடும் பயிற்சி எடுத்து வடித்த பிரம்மோவியமோ..?
எந்த ஸ்டொபில் ஏறிய பறவையோ..?
என் இதயத்தை அந்த இரயிலின் வேகத்தை விட பல மடங்கு ஓட வைக்கிறாள்.
கண்களில் ஒரு வெளிச்சம்...
வைட்டமின் 'D' சூரியனிடமிருந்து கிடக்கும் என்று படித்ததாய் ஞாபகம்.
இன்னும் எத்தனை எத்தனை வைட்டமின்கள் மிச்சம் இருக்கிறதோ,,,
அத்தனையும் அந்த நொடி கண்களில் உதயம்.
அவள் தோழியோடு அளவளாவிய போது அரங்கேறியே அற்புத வார்த்தைகள்...
காதுகளுக்கு இனிய இசை கச்சேரிகள்.
அந்த சர்க்கரை சொற்களுக்கு இல்லை ஈடானகவிதை வரிகள்.
என் ஆயுலின் நாழிகைகள்
அவளை பார்த்துக் கொண்டே காலங்கள் முடிந்திட கூடாதா.
அக்கரையில் அவள் இருக்க அக்கரையாய் பார்க்கிறது இக்கரையில் என் கண்கள்.
எக்கரையில் இறங்க போகிறாளோ,,,
மனம் அக்கரையாய் கேட்கிறது.
அவள் இறங்கக் கூடிய ஸ்டோப் வந்தது...
இறங்கினாள்,,,
என் இதயமும் உடன் இறங்கியது.
அன்று முதல் நான் அதை தேடுகிறேன் கிடைக்க மாட்டேங்குது.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:04 PM 2 கருத்துகள்
வெள்ளி, 13 மார்ச், 2009
எல்லா புகழும் உனக்கே.
(இசை புயல் a.r.ரஹ்மன் ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பெருமையில் ஒரு தமிழன் என்ற முறையில் நான் வாழ்த்த விளைந்த வரிகள்)
அண்டமே அசந்து பார்க்கும் 'ஆஸ்கர் அரசனே'...
ஆஸ்காரயே அசர வைத்த உன்னை,,,
ஆஸ்கர் அரசன் என்று அழைக்காமல்...
வேறு எப்படி அழைப்பது?
இசைக் கலைஞனே,,,
நீ தொட்டது தகரம் அல்ல...
சிகரம்.
அதுவும் ஒன்று அல்ல,,,
இரண்டை சுமந்து நின்றது உனது இரு கரம்.
நீ உண்மையில் விருதுக்ள் காய்க்கும் விசித்திர மரம்.
தென்றலாக தவழ்ந்து இன்று புயலென எழுந்து நிற்கும் இசைப் புயலே...
உன் திறமைக்கு இன்று தான் பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
உன் திறமை இன்று தான் திரை வானில் திரை போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
ரோஜாவில் தொடங்கி இன்று வரைக்கும் ஓர் இசை ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவனே...
இன்று இந்த உலக மண்ணிலே உனக்காக ஒரு சரித்திரமே எழுதப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
சரித்திரமே உன்னை தன் பதிவேட்டில் எழுதிக் கொண்டது.
உலக அரங்கில் நீ விருதுகள் வாங்கினாய்...
நாங்கள் எல்லாம் உன்னால் பெருமை கொண்டோம்.
அதே அரங்கத்தில் நீ தமிழில் முழங்கினாய்...
தமிழே பெருமை கொண்டது.
இசைக்கு புகழ் என்று மற்றொரு பொருளும் உண்டு...
அந்த புகழுக்கே புகழ் சேர்த்த உன்னை...
இசை தமிழில் குளிப்பாட்ட காத்திருக்கிறது உலகமே திரண்டு.
இவ்வளவு பெருமையை பெற்று விட்டு...
எவ்வளவு பொறுமை உனக்கு.
உனது திறமைக்கு,,,
போதாது இந்த ஒரு விருதளிப்பு.
ஆங்கில நாளிதழ்களும்,
வார இதழ்களும்,
விருப்பப்படி எழுதின...
நீ 'இந்தி' திரை இசை உலகைச் சார்ந்தவன் என்று.
சவுக்கடி கொடுத்தாய் அந்த ஊடகங்களுக்கு,,,
உன்னை வளர்த்தது தமிழ் திரை உலகம் என்று...
அந்த மேடையில் நின்று.
ஆஸ்கார் தமிழனே,,,
நீ சொன்னது ஒரே ஒரு வரியாக இருக்கலாம்...
ஆனால் அந்த ஒரு வரி தான் இந்த உலக தமிழர்களுக்கு முகவரி.
இசை இளவரசனே...
நீ நடந்து வரும் பாதை எங்கிலும் முரசு கொட்டும்.
கலைவானியே கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதம் உன் வீட்டு கதவை தட்டும்.
இந்த நூற்றாண்டு அல்ல...
இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னை பற்றி தான் தமிழ் உள்ளங்களின் இதழ்கள் முணுமுணுக்கும்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 9:29 PM 7 கருத்துகள்
வியாழன், 12 மார்ச், 2009
புனிதமான பூக்கள்
ஏன் நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் முக ஒப்பணை செய்துக் கொள்வதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் என்றுமே வாசம் வீசுகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் வாசனை திரவியம் பூசிக்கொள்வது இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் வண்ண வண்ணமாய் விளைகின்றீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் நீங்கள் குடை பிடிப்பதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் வெளியில் சுதந்திரமாய் பூத்துக்குலுங்குகிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உங்களுக்கு
எதிரிகள் யாரும் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இன்று பூத்து நாளை உதிர்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் ஊமையாய் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று மற்றவர்களை புறம் பேச உங்க்களுக்கு அவசியம் இல்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் தெரியுமா..?
எங்களைப் போன்று உதிர போகும் நாளை நீங்கள் நினைப்பதில்லை.
பூக்களே...
ஏன் நீங்கள் எங்களால் போற்ற படுகிறீர்கள் தெரியுமா..?
உங்களைப் போன்று புனிதமாய் நாங்கள் கொஞ்சம் கூட இல்லை
இடுகையிட்டது சுவரன் நேரம் 10:05 PM 2 கருத்துகள்