சனி, 31 ஜனவரி, 2009
கற்பனை கஜானா
இடுகையிட்டது சுவரன் நேரம் 12:48 PM 2 கருத்துகள்
வெள்ளி, 30 ஜனவரி, 2009
இன்று நானும் கவிஞன்
தொடக்கம்...
தொடக்கம்...
தொடக்கம்...
என் உயிரில் கவி தொடக்கம்...
தொடரும்
அது தொடரும்...
வாழ்வின் எல்லை வரை தொடரும்.
எனக்கென நான் எழுதும் முதலாம் சுயசரிதை...
இனி சுயமாய் எழுத போகிறென் கவிதை.
யாராலும் இனி தடுக்க முடியாது நான் ஒரு கவிஞனாவதை.
யார் தந்ததிந்த கவி ஞானமொ..?
இன்று நானும் கவிஞன்.
தமிழ் தாயின் ஆசிர்வதத்தால்,,,
இன்று நானும் தமிழ் தாய்க்கு மகன்.
தமிழுக்கும்...
தமிழ் கவிதைகளுக்கு அடிமையான ரசிகன்.
இடுகையிட்டது சுவரன் நேரம் 1:53 PM 3 கருத்துகள்
கவிதை என்னானது..?
இரவு எழுதிய கவிதை நிலவானது...
ராவோடு ராவாக அது களவானது.
கனவு எழுதிய கவிதை கானலானது...
உறக்கம் தெளிந்து எழுந்தால் அது தூள் தூளானது.
விரல்கள் எழுதிய கவிதை அட்சரமானது...
சந்தம் என்னும் நூலில் கட்டிய பூச்சரமானது.
கண்கள் எழுதிய கவிதை காட்சிகளானது...
உண்மை என்று நிருபிக்க அதுவே சாட்சியானது.
தென்றல் எழுதிய கவிதை தீண்டி போனது...
பெயர் கேட்பதர்க்கு முன்னறே ஓடி மறைந்து போனது.
இயற்கை எழுதிய கவிதை அழகின் சொப்பனமானது...
செயற்கையின் கையில் அக பட்டு அழுக்கான சிற்பமானது.
காதல் எழுதிய கவிதை இரு இதயங்க்களுக்கு தூதானது...
தன்னையே மறக்க செய்யும் மதுவானது.
இடுகையிட்டது சுவரன் நேரம் 9:06 AM 0 கருத்துகள்